வாசிப்பை ஊக்குவிக்கும் உலக நாடுகள்!

புத்தக வாசிப்பை ஊக்குவிக்க உலகெங்கும் என்னவெல்லாம் செய்கிறார்கள்!

ஸ்பெயினில் கடற்கரை நெடுகிலும் பிரபல புத்தகங்களின் கதாபாத்திர வேடமிட்டு கத்தை கத்தையாய் புத்தகங்களை விற்கிறார்கள்.

போர்ச்சுகலில் புத்தக வாசிப்பிற்கென மாதாந்திர விடுமுறையுடன், பள்ளி வாசல்களில் புத்தகங்களை வைத்து வாசிப்பை ஊக்குவிக்கிறார்கள். பூங்காக்களில் வாசிப்புக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

சீனாவில் மிஷின்களில் காசு போட்டு, புத்தகத்தின் பெயரை டைப் செய்தால் நாம் விரும்பிய புத்தகத்தை வாங்கலாம்.

ஜப்பானில் நாம் ஆர்டர் செய்த உணவு வரும்வரை படிக்க மேஜைக்கு அடியிலேயே புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன; அதை நாம் உணவு வரும் வரை படிக்கலாம்.

டென்மார்க்கில் சாலைகளில் விளக்குக் கம்பங்களில் பெட்டிகளில் புத்தகங்கள் – யார் வேண்டுமானாலும் தாம் படித்த புத்தகங்களை மற்றவர்களும் படித்து மகிழ அங்கே கொண்டு வைக்கலாம்.

ஸ்வீடனில் செயின்ட் பீட்டர் தினத்தன்று பிள்ளைகள் பெற்றோர்களுக்கு மலர்ச்செண்டு பரிசளிப்பார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு புத்தகங்களைப் பரிசளிப்பார்கள்.

பாரிஸ் நகரத்தில் வாசிப்பு பூங்காக்கள் வந்துவிட்டன. இரவும் பகலும் வாசிக்க விரும்புவோர் வாசிக்கலாம்; அதற்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

க்யூபாவில் ரேஷன் பொருட்களோடு உலக அளவில் பேசப்படும் புத்தகங்களும் பொதுவிநியோக முறையில் வழங்கப்படுகின்றன.

நன்றி: புத்தகம் பேசுது

Comments (0)
Add Comment