படிப்பது எப்போது பயனுடையதாக மாறும்!

வாசிப்பு பற்றி எழுத்தாளர் சுஜாதா

தினமும் படியுங்கள். ஐந்து நிமிடம், பத்து நிமிடம் அல்லது ஒரு மணிநேரம்… தினமும் என்பதுதான் இதில் அழுத்தமான வார்த்தை.

நான் சுமார் 1,500 பக்கங்கள் கொண்ட ‘Humorous Prose’ என்கிற புத்தகத்தை தினம் பாத்ரூமிலேயே கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து முடித்துவிட்டேன். பாத்ரூம் என்பதை உதாரணத்துக்குச் சொன்னேன். கிடைத்த நேரத்தில் எல்லாம் படிப்பதுதான் முக்கியம்.

அதற்காக சாலையைக் கடக்கும்போதோ, பேருந்தில் தொங்கும்போதோ, படிக்க முயற்சி செய்யாதீர்கள். படிக்க ஆசாமி உயிருடன் வேண்டும்.

ஒரே சமயத்தில் நான்கு அல்லது ஐந்து புத்தகங்கள் படிப்பதில் தவறில்லை. இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் மேயலாம்.

துப்பறியும் கதைகளை இரண்டுமுறை படிப்பது அவசியமற்றது. அந்த நேரத்தில் மற்ற புத்தகங்களைப் படித்து பயன் பெறலாம்.”

  • எழுத்தாளர் சுஜாதா

– நன்றி: விகடன்

Comments (0)
Add Comment