காலத்தின் பொருளுணர்த்தும் ரூமியின் தத்துவங்கள்!

மெளலானா ஜலாலுதீன் ரூமியின் தத்துவங்கள் நல்ல மனப்பயிற்சியையும் தத்துவச் சிந்தனைப் பயிற்சியையும் ஒரு சேர அளிக்க வல்லது.

அவருடைய நூலின் ஓர் இடத்தில் ஒரு படைத்தளபதி வந்து ரூமியிடம் கேட்பான், “போருக்குச் செல்கிறேன். எனக்கு நல் ஆலோசனை ஒன்று சொல்லுங்கள்”, என்று.

“போருக்குச் செல்கையில் உன்னுடைய வாள் இரண்டு பக்கமும் கூர் உடையதாக இருக்கட்டும். ஒரு முனையில் உள்ள கூர்மையால், எதிரிகளைக் கையாள்வது போலவே இன்னொரு முனையின் கூர்மையால் போரின் போதான உன்னுடைய உணர்ச்சிகளைக் கையாளவும் கற்றுக்கொள்” என்பார் ரூமி.

மனதில் ஆழமாய்ப் பதிந்த ரூமியின் கூற்று இது. இந்தச் சிந்தனை, போர்க்களத்தில் மட்டுமன்று வாழ்க்கையின் அன்றாடத்திலும் எவ்வளவு அவசியமான வழிகாட்டி.

காலத்தின் பொருள் உணர்த்தும் அனுபவமுடையது ரூமியின் தத்துவங்கள்.

– மௌலானா ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்வில் நடந்த சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு இத்ரீஸ் ஷாஹ் எழுதிய ரூமியின் வாழ்வில் ஞானக்கதைகள் நூறு நூலிலிருந்து.

Comments (0)
Add Comment