என்னுடைய கதாநாயகிகளுக்கு லெக்ஷ்மி என பெயர் வைக்கக் காரணம்!

மனம் திறந்த இயக்குநர் மகேந்திரன்

விசுவின் கதாநாயகிகளுக்கு உமா, கிரேசி மோகன் கதாநாயகிகளுக்கு ஜானகி என பெயருக்கான காரண கதைகளைப் போலவே இயக்குநர் மகேந்திரன் அவர்களின் கதாநாயகிகள் லெக்ஷ்மிக்கும் ஒரு கதை இருக்கிறது.

இயக்குநர் மகேந்திரனும் நடிகர் செந்தாமரையும் மேடை நாடக காலத்திலிருந்தே நண்பர்கள். தங்கபதக்கம் கதை செந்தாமரைக்காக மகேந்திரன் எழுதியது.

செந்தாமரை அவர்களுடன் இருக்கும்போது திடீர் திடீரென மதிய உணவிற்கு அவர் வீட்டிற்கு நான் உட்பட சில நண்பர்களை அழைத்துச் செல்வார். அப்போதெல்லாம் செந்தாமரை பெரிய வசதி இல்லாமல் ஏழ்மையில் தான் இருந்தார்.

திடீர் என செல்வதால், இல்லை என சொல்லாமல் தனக்கு வைத்திருக்கும் உணவை எங்களுக்கு பறிமாறிவிட்டு பல நாள் பட்டினியில் இருந்திருக்கிறார் செந்தாமரையின் மனைவி.

இந்த விஷயம் ரொம்ப வருடங்களுக்கு பிறகே எனக்கு தெரிந்தது. தன்னைப் பட்டினிப் போட்டு எங்களுக்கு தாயுள்ளத்துடன் உணவளித்த செந்தாமரையின் மனைவியின் பெயர் லெக்ஷ்மி.

தங்கப் பதக்கத்தில் தாயாக நடித்த கே.ஆர்.விஜயா அவர்களின் கதாபாத்திரத்திற்கும், உதிரிப்பூக்கள் அஸ்வினி கதாபாத்திரத்திற்கும் லெக்ஷ்மி என அவர்கள் பெயரையே வைத்தேன்.

  • ‘சினிமாவும் நானும்’ புத்தகத்தில் இயக்குநர் மகேந்திரன்.
Comments (0)
Add Comment