தமிழறிஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ‘பாரதி’ விழா!

டெல்லி கலை இலக்கியப் பேரவை முன்னெடுப்பில் பஹ்ரைன் சொல்வேந்தர்கள் இணைந்து நடத்திய மாபெரும் பாரதி விழா (14.06.2025) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பல நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தமிழறிஞர்கள் பங்கேற்றனர். இவர்கள் தமிழோடு சேர்த்து நாட்டையும் நேசிக்கிறார்கள் என்பது கூடுதல் பெருமை.

பாட்டுக்கொரு புலவன் பாரதியை நினைவுகூறும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்வில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியைகளும் மாணவிகளும் பங்கேற்று உரையாற்றினர்.

தமிழார்வலர்களின் உரைவீச்சில் ‘பன்முகப் பார்வையில் பாரதி’ என்ற தலைப்பில் கருத்தரங்கமும், புகழ்பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்களின் உரையும், கவிஞர்களின் கவியரங்கமும் அரங்கேறியது.

மகாகவி பாரதியைப் பற்றி பலரும் தனது கருத்துக்களை முன்வைத்தனர்.

நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் அவர்களின் பேருரை, விருதளிப்பு என அரங்கம் நிறைந்த நிகழ்வாக நடந்தேறிய இந்த விழாவின் தொடர்ச்சியாக, மாலை நேரத்தில் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்களுடன் நடைபெற்ற இரவு விருதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

தமிழைப் போற்றும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரிப் பேராசிரியைகள் முனைவர். க. சத்தியபிரியா, முனைவர் சாந்தி,  சை.நஜீரா பேகம், பத்மா  உள்ளிட்டோரும், மாணவிகள் அபிநயா (பி.ஏ. தமிழ்), ரேச்சல் (பி.எஸ்.சி), ரேஷ்மா (பி.எஸ்.சி கணணி அறிவியல்), தனுஷா (நாட்டியத் துறை) உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் கையால் விருதுகள் வழக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பங்கேற்றதற்காக, கல்லூரிப் பேராசிரியைகளையும் மாணவிகளையும் கல்லூரி முதல்வர் முனைவர் மணிமேகலை மனதார வாழ்த்தினார்.

_ தனுஷா

 

 

 

 

 

 

 

 

Comments (0)
Add Comment