காவியப் பாடல்களால் மனதை நிறைத்த கே.வி.எம்!

அருமை நிழல்:
திரைப்படங்கள் வெற்றியோ தோல்வியோ, ஆனால் கே.வி. மகாதேவனின் இசை மட்டும் தோற்கவே இல்லை. ஏகப்பட்ட பாடலாசிரியர்கள், பாடகர்களை அறிமுகம் செய்து திறம்பட தன் இசைப் பயணத்தை தொடர்ந்தவர் கே.வி.மகாதேவன்.
அறுபதாம் ஆண்டின் இறுதியில் மகாதேவனுக்கு மகத்தான புகழைச் சேர்க்க வந்த படங்களில் முக்கியமான இரண்டு படங்களாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களைச் சொல்லலாம்.
ஒன்று ஏ.பி. நாகராஜனின் திரைக்கதை வசனத்தில் கே. சோமுவின் இயக்கத்தில் வெளிவந்த ‘பாவை விளக்கு’.
அடுத்தது ஏ.பீம்சிங் இயக்கத்தில் கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் கதை வசனத்தில் வெளிவந்த ‘படிக்காத மேதை’.
காலத்தால் அழிக்க முடியாத காவியப் பாடல்களால் நம் மனதை நிறைத்த இசை கே.வி.மகாதேவன் இசை தான்.

குறிப்பு: நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் திலகமும் கே.வி.மகாதேவனும் சந்தித்துக் கொண்ட நெகிழ்வான தருணம். 

நன்றி: முகநூல் பதிவு
Comments (0)
Add Comment