மஹர் ஒருவர் பௌத்தராவதால் என்ன நடந்துவிடப் போகிறது?

மஹர் ஒரு பௌத்தராவதால் அப்படி என்ன நடந்துவிடப் போகிறது.

ஹர் என்று சிலர் கூறுவார்கள். அப்படிச் சொல்லாதீர்கள் என்று அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இது அவர்களுக்கு ஆபத்தானது. மேல் தட்டில் உள்ளவர்களும் செல்வந்தர்களும் மதத்தின் அவசியம் பற்றி உணர மாட்டார்கள்.

இவர்களில் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு வசிப்பதற்கு மாட மாளிகைகள் இருக்கின்றன. அவர்களுக்கு சேவை செய்வதற்கு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பணமும் பந்தாவும் செல்வாக்கும் அந்தஸ்தும் மரியாதையும் இருக்கின்றன.

செல்வமும் இவ்வகையைச் சேர்ந்தவர்கள் மதத்தைப் பற்றி நினைப்பதற்கோ அல்லது அது குறித்து சுவலைப்படுவதற்கோ அவசியமில்லை.

மதம் ஏழைகளுக்கு அவசியமானது. மதம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவசியமானது.

ஒரு மனிதன் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தான் வாழகிறான். வாழ்க்கையின் ஆணிவேர் நம்பிக்கையில்தான் பொதிந்துள்ளது.

இந்த நம்பிக்கை அடிவேர் இழக்கப்படுமானால் வாழ்க்கை என்ன ஆவது. மதம் நம்பிக்கையை அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு ஒரு செய்தியைக் கூறுகிறது.

பயப்படாதீர்கள். வாழ்க்கை நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கும். இது உறுதி என்று இதனால்தான் ஏழைகளும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களும் மதத்தை அரவணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • 1956 அக்டோபர் 15-ம் தேதி பாபாசாகேப் அவர்கள் புத்தமதம் ஏற்று அதே மேடையில் ஆற்றிய சிறப்பு உரையின் ஒரு பகுதி.

– நன்றி: தெ.அம்பேத்கர் பிரசாந்த், வழக்கறிஞர், பெளத்த சமுக பண்பாட்டாளர்

#மஹர் #பௌத்தர் #பாபாசாகேப் #புத்தமதம் #அம்பேத்கர் #பாபாசாகேப்_அம்பேத்கர் #மதம் #ஒடுக்கப்பட்ட_மக்கள் #மத_நம்பிக்கை #பெளத்தம் #mahar #boutham #dhammam #bouthar #babasaheb_ambedkar #ambedkhar #religion #buddha #sc #annal_ambedkar_speech #annal_ambedkar

Comments (0)
Add Comment