தேர்தல் நெருங்கினால் மகளிருக்கு உதவித்தொகை!

செய்தி:       

பாஜக 2,100; காங்கிரஸ் கூட்டணி 3000 : மகளிர் உதவித் தொகை அறிவிப்பில் போட்டோ போட்டி!

– மராட்டியத்தில் ஒரே நாளில் தேர்தல் அறிக்கை வெளியிட்டதால் பரபரப்பு.          

கோவிந்த் கமெண்ட்: 

மகளிர் உதவித்தொகை வழங்குவதில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன போலிருக்கு.

திமுக, சென்ற தேர்தலின்போது மகளிருக்கு வழங்குவதாகச் சொன்ன தொகையை 2 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வழங்க முடிந்தது. தற்போது மராட்டியத்தில் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவும் காங்கிரசும் போட்டி போட்டுக்கொண்டு மகளிர் உதவித்தொகைக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன. அதிலும் காங்கிரஸ் கூட்டணி மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்க, பாஜக தரப்பில் 2,100 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எப்படியோ தமிழகத்தில் அடிக்கடி கேட்கிற திராவிட மாடல் பல மாநிலங்களுக்கு முன் மாடலாக இருக்கும் போலிருக்கிறது. 

Comments (0)
Add Comment