விவாதிப்பது குறித்து எத்தனை சவால்கள்!

செய்தி: 

யாருடைய ஆட்சியில் சிறந்த திட்டங்கள் வந்துள்ளன. முதலமைச்சருடன் ஒரே மேடையில் பகிரங்கமாக விவாதிக்கத் தயார்! – எடப்பாடி பழனிசாமி.

கோவிந்த் கமெண்ட்:   

மிக சமீபத்தில் தான் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.சுப்ரமணியம் தன்னுடன் விவாதிக்கத் தயாரா என்று ஒரு சவால் விட்டிருந்தார். அந்த சவாலை ஏனோ யாரும் பொருட்படுத்தவில்லை.

தற்போது முதலமைச்சருடன் ஒரே மேடையில் பகிரங்கமாக விவாதிக்கத் தயாரா என்று சவால் விட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி. இந்த சவாலை யார் பொருட்படுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.

தீபாவளிக்கு விடும் புஷ்பானங்கள் சமயங்களில் செயல்படாமல் போவதுபோல சவால்களும் நீர்த்துப் போய்விடும் போலிருக்கிறது.       

         

Comments (0)
Add Comment