திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்!

திரைத் தெறிப்புகள்-9:

1958-ம் ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த ‘பதி பக்தி’ படத்தில் இப்படி முத்தான வரிகளை எழுதி இருப்பார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

“இந்தத் – திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு கண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி” என்று துவங்குகிற பாடலில் கீழ்க்கண்ட வரிகள் இடம்பெற்று இருக்கும்.

“மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்
இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி”.

என்று நகர்கிற பாடல் இறுதியில் இப்படி முடியும்

“நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும்”.

என்று எளிய தொழிலாளர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி நிறைவடைந்து இருக்கும் இந்தப் பாடலை மிக லாவகமாக தன்னுடைய கணீர்க் குரலில் பாடியிருப்பார் டி.எம்.சௌந்தரராஜன்.

நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பில் இந்தப் பாடல் காட்சி மகத்தானபடி கேட்கிறவர்களின் மனதில் பதிந்து இருக்கும்.

மக்களைப் பற்றி அதிலும் மிக எளிய மக்களின் வாழ்வைப் பற்றி எப்படியெல்லாம் யோசித்து எழுதி இருக்கிறார் ‘மக்கள் கவிஞர்’.

Comments (0)
Add Comment