சிரஞ்சீவியின் விதியை மாற்றிய ‘விதி’!

மோகன், பூர்ணிமா பாக்கியராஜ், சுஜாதா, ஜெய்சங்கர் நடிப்பில் சக்கைபோடு போட்ட விதி திரைப்படம் தெலுங்கில் ‘நியாயம் காவாலி’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.

தமிழில் மோகன் ஏற்ற வேடத்தை, தெலுங்கில் சிரஞ்சீவி நடித்தார். அப்போது அவர் தெலுங்கு சினிமாவில் புதுமுக நடிகர் மட்டுமே. சூப்பர் ஸ்டார் ஆகி இருக்கவில்லை. பூர்ணிமா வேடத்தில் தெலுங்கில் ராதிகா நடித்தார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது, அனைவரின் முன்னாலும் தான் அவமானப்படுத்தப்பட்டதாக சிரஞ்சீவி கூறி இருக்கிறார்.

”உன் மனசுல என்ன சூப்பர் ஸ்டார்ன்னு நினைப்பா?” என்று தொடங்கி, மிக மோசமான வசைகளை எதிர்கொண்டதாகவும், அன்றுதான், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்று தான் தீர்மானித்ததாகவும் சிரஞ்சீவி தெரிவித்திருக்கிறார்.

விஜய் தேவரகொண்டாவும், சிரஞ்சீவியும் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் சிரஞ்சீவி பகிர்ந்து கொண்டது.

  • நன்றி : முகநூல் பதிவு
bakyarajjaishankarmohanniyayam kaavalipoornimaradhikasiranjeevisujathavithi movieசிரஞ்சீவிசுஜாதாநியாயம் காவாலி திரைப்படம்பாக்கியராஜ்பூர்ணிமாமோகன்ராதிகாவிதி திரைப்படம்விஜய் தேவரகொண்டாஜெய்சங்கர்
Comments (0)
Add Comment