பற்றி எரியும் மணிப்பூர்: பதற்றத்தில் ஆளும் கட்சியும் ஆளுநரும்!

பழங்குடி மாணவர் அமைப்பு சார்பில் மணிப்பூரின் மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினரல்லாதோரும் பேரணியில் ஈடுபட்டதால், இருதரப்பிடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் மலைகளையொட்டியிருந்த வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கடைகள் எரிந்து சேதமடைந்தன.

இரு இனக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் நீடித்து வருகிறது. கலவரத்தை அடக்க மணிப்பூரில் 5 நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களை மீட்க இந்திய ராணுவத்தினரும் அசாம் ஆயுதப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். தற்போதுவரை பொதுமக்கள் 9 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில், கலவரக்காரர்களை கண்டதும் சுட அம்மாநில ஆளுநர் அனுசுயா சுய்கே அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்த உத்தரவு பிறப்பிப்பதாக ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment