– எம்.ஜி.ஆர்.
“அண்ணா அமைத்த கழகத்திலிருந்து நான் 1972 அக்டோபரில் தூக்கி எறியப்பட்ட பிறகு, தமது அமைப்பின் பெயரிலும் கொடியிலும் கொள்கையிலும் செயல் திட்டங்களிலும் அண்ணாவே நீக்கமற நிறைந்திருப்பார் என்பதனை அண்ணாவின் பகைவர்கள்கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்த அற்புதமான மாற்றத்துக்கு என்ன காரணம்? தனிப்பட்ட என் பலம், சாமர்த்தியம், அரசியல் என்று என்பால் அன்பு கொண்டோர் கூறினாலும், நான் அவர்கள் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்வது, ‘என்னை வழிநடத்தும் தெய்வமான அமரர் பேரறிஞர் அண்ணா எனும் சக்தியின் வெற்றியே இதற்குக் காரணம்’ என்பதைத்தான்.
மகாத்மா காந்தியின் வாழ்க்கையே அவருடைய செய்தி என்பார்கள். அதுபோலவே அண்ணாவின் வாழ்க்கையும் நமக்கான செய்தியாகும்!”
– பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு தினத்தையொட்டி (03.02.2022) சிறு பதிவு.