சிறந்த இந்திய இலக்கியப் படைப்பாளிகளுக்கு மத்திய அரசால் தேசிய அளவில் அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மதிப்பிற்குரிய விருதாக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது பெறுபவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சமும், ஒரு பட்டயமும் வழங்கப்படும். நாடு முழுவதும் 24 மொழிகளுக்கு சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றிற்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், எழுத்தாளர் வெ.அண்ணாமலை அவர்கள் எழுதிய ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்கு 2021ம் ஆண்டுக்கான தமிழில் சிறந்த நாவலுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
எழுத்தாளர் வெ.அண்ணாமலை ‘இமையம்’ என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். கோவேறு கழுதைகள் என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகமானார். இவர் தமிழ் நாட்டுப்புற வட்டார வழக்குகளில் நாவல்களை உருவாக்குவதில் மிக முக்கியமானவர்.
எழுத்தாளர் இமையம் அவர்கள் எழுதிய பெத்தவன் என்ற நாவல் குறும்படமாகவும் எடுக்கப்பட்டது. மேலும் செடல், வீடியோ மாரியம்மன், சாவு சோறு போன்றவை அதிகம் புகழ் பெற்ற நாவல்கள் ஆகும்.