க்ரைம்

சமூக வலைத்தளங்களுக்கு மேலும் நெருக்கடியா?

மக்களின் குரல் வெளிப்படுவது ஆட்சியாளர்கள் மூலமாக மட்டுமல்ல. சமூக வலைத்தளங்களிலும் அவை வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தக் குரலை கட்டுப்படுத்த முனைவது, உண்மையைப் பிரதிபலிக்கின்ற மக்களின் வாயைக் கட்டிப் போடுவதற்கு சமமான ஒன்றுதான்.

ஜீபே மூலம் நடக்கும் நவீனக் கொள்ளை!

செய்தி: சென்னையில் பரவி வரும் புதிய கொள்ளைக் கலாச்சாரம் – ஜீபே மூலம் பணம் பறிக்கும் கும்பல். கோவிந்த் கமெண்ட்: பணமதிப்பிழப்பிற்கு பிறகு ஜீபே, பே.டி.எம் என்று செல்போனில் உள்ள நவீன தொழில்நுட்ப வசதி மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவித்தது மத்திய அரசு. அப்போதே ஏ.டி.எம் கார்டை முறைகேடாக பயன்படுத்தி, ஏ.டி.எம் மையங்களில் ஒரு கும்பல் திருடுகிறது என்று அடுத்தடுத்து செய்திகள் வெளி வந்தன. இருந்தாலும் இன்றுவரை அந்தவிதமான ஏ.டி.எம் கொள்ளைகள் நின்றபாடாக இல்லை. தற்போது ஜீபே, […]

தர்மசாலாவில் இப்படியா?

நம்ம ஊர் பழனி மாதிரி கர்நாடகாவில் பக்தர்கள் அதிகமாகச் செல்லும் இடங்களில் ஒன்று, தர்மசாலா. கர்நாடகாவைக் கடந்து அங்கு பிற மாநில பக்தர்கள் செல்வது அதிகம். இந்த நிலையில் அங்கு பணியாற்றிய துப்புரவுப் பணியாளர் ஒருவர் பொதுவெளியில் தெரிவித்திருக்கும் சில சம்பவங்கள் பலரையும் கதிகலங்க வைத்திருக்கின்றன. பல பெண்கள் உயிரிழந்த நிலையில் கொண்டுவரப்பட்டு, தான் அதை புதைக்க நேர்ந்த அவலத்தை அவர் தெரிவித்திருக்கிறார். இது கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள பக்தர்களை அதிர வைத்திருக்கிறது. இப்படி […]

குற்றவாளிக்குக் கருணை காட்டக் கூடாது!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை […]

பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கும் ஆயுள் தண்டனை!

கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.  இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அதன்பிறகு இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தது. இதில் பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரிராஜன் (வயது 30), வசந்தகுமார் (32), சதீஷ் (33), மணிவண்ணன் […]

அண்ணா பல்கலை. மாணவிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு யார் பொறுப்பு?

2024-ம் ஆண்டின் கடைசி நாட்கள் தமிழகத்தைக் களங்கப்படுத்தும் கறுப்புச் செய்திகளுடன் முடிகிறதே என கவலைப்பட வைத்த சம்பவம், நெல்லையில் அரங்கேறியது. அங்குள்ள பாளையங்கோட்டை பகுதியில் நெல்லையின் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது, கடந்த 20-ம் தேதி ஒரு விசாரணைக்கு வந்த வாலிபர், நீதிமன்ற வாயில் முன்பு துடிக்கத் துடிக்க வெட்டிக் கொல்லப்பட்டார். போலீசார் கண் முன்னால் இந்த கொடூரம் நிகழ்ந்தது. இதனை மறக்கடித்து, நாடு முழுவதையும் பதைபதைக்க வைக்கும் சம்பவம் தலைநகர் சென்னையில் கடந்த 23-ம் தேதி நிகழ்ந்தேறியுள்ளது. […]