பிரபலங்களின் நேர்காணல்கள்

விருதுகளைவிட மதிப்பால் உயரமான எஸ். ஜானகி!

குமுதம் வார இதழில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். ஹிந்து ரங்கராஜன் என்று பரலாக அறியப்பட்ட மூத்த பத்திரிகையாளருடன் சென்னையில் உள்ள பின்னணிப் பாடகியான எஸ்.ஜானகி அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன். சாதாரண நூல் புடவையுடன் எந்த விதமான ஆடம்பரங்களற்ற தோற்றத்துடன் – எதோ நம்ம வீட்டுப் ‘பெரியம்மா’வைப் போலவே இருந்தார் ஜானகி. பேச்சில் அகங்காரத்தின் தொனி சிறிதும் இல்லை. தயக்கங்கள் எதுவுமில்லாத, அருவி கொட்டுவதைப் போன்ற பேச்சுமொழி அவரிடம் இருந்தது. அந்தப் பேச்சில் அன்பும் கரிசனமும் வெளிப்பட்டன. […]

உலகை அச்சுறுத்தும் பசிபிக் கடலின் இரு முகங்கள்!

பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில், குறிப்பாக பூமத்திய ரேகை அருகே, கடல் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிகமாக சூடாகும்போது எல் நினோ உருவாகிறது.

பூமணி: கரிசல் மண்ணை நேசித்த எழுத்துக் கலைஞர்!

இறுதிவரை, சக மனிதர்களிடம் இயல்பான அன்பை வெளிப்படுத்தக் கூடியவராகவே இருந்தார் பூமணி.

புகழின் முன் அசையாதிருக்க கற்றுக்கொள்ள வேண்டும்!

படித்ததில் ரசித்தது: காற்றினால் ஒரு பாறை அசையாது; அதுபோல பழி மற்றும் புகழின் முன் அசையாதிருக்க கற்றுக்கொள்ள வேண்டும்! – கௌதம புத்தர்    

பாமர மக்களும் அறிவியலை அறிந்து கொள்ள உதவும் நூல்!

நூல் அறிமுகம்: டி.ஆர்.டி.ஓ.வின் மூத்த விஞ்ஞானி வி.டில்லிபாபு, ‘தொழில்நுட்பம் மக்களுக்காகவே’ என்ற அடிநாதத்துடன் இளைய தலைமுறையினரை ஒருங்கிணைத்துச் செயல்படுவதுடன், கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்து 13 நூல்களை எழுதியுள்ள அவருடைய ஆராய்ச்சி சோதனைகள், வெற்றி பெற்ற விதம், அதில் ஏற்பட்ட பிரச்னைகள், சுவாரஸ்ய நிகழ்வுகளை போர் விமானங்கள் தயாரிக்கும் ராணுவ அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனத்தில் தலைமை மேலாளராகப் பணியாற்றும் தொகுப்பாசியர் தொகுத்துள்ளார். நாட்டின் பாதுகாப்புத் துறையில் உபயோகிக்கப்படும் பீரங்கிகள், […]

பாலா: தேசிய பெருமிதம் பெற்றுத் தந்த தமிழ்ப் படைப்பாளி!

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்கள். தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்படும் திரைக் காவியங்களைப் படைத்திருக்கிறார்கள். ஆனால், வெகுசில இயக்குநர்கள் மட்டுமே தேசிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறார்கள். அதுவும் இந்தி உள்ளிட்ட அதிக மக்கள் பேசும் மொழிப் படங்களை இயக்காமலே இந்தி சினிமா ஆளுமைகளின் மதிப்பைப் பெறுவது சாதாரண விஷயம் அல்ல. அத்தகு அங்கீகாரத்தை தன் வெகுசில படங்கள் மூலமாகவே பெற்றிருப்பவர் இயக்குநர் பாலா. காவியமாய் நிகழ்ந்த அறிமுகம் தேனி மாவட்டத்தில் […]