அறிஞர் அண்ணாவுக்குச் சிலை வைக்க நினைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணாவைப் புகைப்படம் எடுக்க ஆள் அனுப்பினார்.
புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக் கலைஞர், அண்ணாவை ஒரு விரல் காட்டி நிற்கச் சொன்னார்.
அண்ணாவுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை.
“சரி, தம்பி ராமச்சந்திரன் சொல்லியிருந்தால், அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்” என்று ஒரு விரல் காட்டி, போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார் அண்ணா.
பிறகு எம்.ஜி.ஆரை நேரில் பார்த்தபோது, ஒரு விரலைக் காட்டி புகைப்படம் எடுக்கச் சொன்னதன் காரணத்தைக் கேட்டார் அண்ணா.
“ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்ற உங்கள் பொன்மொழியை மக்கள் புரிந்து கொள்வார்கள்” என்றார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
சிலாகித்துப்போன அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பாராட்டி மகிழ்ந்தார்.