கேப்டன் பதவி வேண்டாம்; கிரிக்கெட் போதும்!

ஹர்மன்ப்ரீத் கௌர் உருக்கம்

என்னுடைய கடமையை முடிந்துவிட்டது என்று ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றையும் ஹர்மன்ப்ரீத் கௌர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இன்று, நான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவங்களுக்குமான கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன்.

இது வெறும் சாதாரண முடிவு அல்ல; பல ஆண்டுகால நினைவுகளும், உணர்ச்சிகளும், தியாகங்களும், என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் அடங்கியுள்ளன.

அணிக்காக விளையாட வேண்டும் என்று என்னுடைய தனிப்பட்டவற்றையும் ஒதுக்கி வைக்க வேண்டியிருந்தது.

ஒரு கேப்டனாக சில கடினமான முடிவுகளையும் எடுக்க வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன்.

கடினமான தருணங்களையும், மனவேதனைகளையும், விமர்சனங்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

அதுமட்டுமல்ல, வெற்றிகள், கொண்டாட்டங்கள் என வாழ்க்கையின் மாறுபட்ட தருணங்களையும் அனுபவித்திருக்கிறேன்.

இன்று கேப்டன் பதவியிலிருந்து உணர்ச்சிகள் நிறைந்த மனதுடன் விடைபெறுகிறேன். நான் என் கடமையைச் செய்துவிட்டதாக உணர்கிறேன்.

இந்திய மகளிரணிக்கு கேப்டனாக இருந்ததற்கு என்றென்றும் நன்றியுடையவளாக இருப்பேன். இப்போது நான் அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

கேப்டன் பதவி இன்றுடன் முடிவடையலாம். ஆனால், கிரிக்கெட் மீதான என் அன்பு ஒருபோதும் முடிவடையாது.

என்னுடைய ஒவ்வொரு சக வீரருக்கும், பயிற்சியாளர், உதவிப் பணியாளர்கள், நிர்வாகிகள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், என் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இன்ப துன்பங்களில் எனக்குத் துணையாக நின்ற ஒவ்வொரு ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விளையாட்டுக்காக ரத்தம், வியர்வை, தியாகம், பெருமை எல்லாவற்றையும் கொடுத்தேன்.

இப்போது, ​​கிரிக்கெட் மீதான காதலுக்காக மீண்டும் விளையாட நான் தயாராகிவிட்டேன். கேப்டன் பதவி முடிவடைகிறது. கிரிக்கெட் பயணம் தொடரும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment