சச்சினின் சாதனையைத் தொட முடியுமா கோலியால்?

ஒருநாள் கிரிக்கெட்டில் 15000 ரன்களை அடித்துள்ளார் விராட் கோலி. மொத்தமாக 86 சதங்கள் குவித்துள்ளார். 

இந்தச் சூழலில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற இமாலய சாதனையை விராட் கோலியால் முறியடிக்க முடியுமா? என்ற கேள்வி மீண்டும் வைரலாகியுள்ளது.

டெஸ்ட், டி20 என இரண்டு வடிவத்திலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட கோலியால் ஒருநாள் கிரிக்கெட் மட்டும் விளையாடி எப்படி அந்த வரலாற்றை நிகழ்த்த முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதிலும் வரும் 2027 உலகக்கோப்பை தான் தன்னுடைய கடைசி உலகக்கோப்பை என்று கூறியிருக்கும் கோலி, இந்தியா கோப்பை வெல்ல அனைத்தையும் செய்வேன், ஒருவேளை கோப்பை வெல்லமுடியவில்லை என்றால் அதுதான் என்னுடைய கடைசி முயற்சி என்று ஓய்வு குறித்த சூசகமான அறிவிப்பையும் கொடுத்துள்ளார்.

இப்படியான சூழலில் தான் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக விராட் கோலியின் ஆக்ரோசமான 139 ரன்கள் ஆட்டத்தை பார்த்த முன்னாள் இந்திய வீரர்கள், விராட் கோலியால் 100 சதங்கள் சாதனையை எட்டமுடியும் என்று கூறியுள்ளனர்.

விராட் கோலி அவருடைய மனதில் சிறிது அழுத்தத்துடன் விளையாடும் போதெல்லாம், தனக்குள் இருக்கும் மிருகத்தை வெளிக்கொணர்ந்து அபாரமான ஆட்டங்களை வெளிப்படுத்துகிறார் என்றும்,

தன்னுடைய ரோல் மாடலான சச்சினின் 100 சதங்களை முறியடிக்க வேண்டும் என்ற முயற்சியை அவர் எடுப்பார் என்றும் அஜிங்கியா ரஹானே கூறியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தினேஷ் கார்த்திக், கடைசியாக கோலி பேட்டிங் செய்தது ஜூலை 19 அன்று. அதற்குபிறகு இப்போது செப்டம்பர் 27.

இரண்டு மாதங்களாக மட்டையைத் தொடாத ஒரு வீரரைப் போலவா அவர் விளையாடுகிறார்.

சச்சினின் 100 சதங்களை முறியடிக்க யாராவது ஒருவர் இருக்கிறார் என்றால், அது விராட் கோலி மட்டும்தான்.

அவருடைய தொழில்முறை வாழ்க்கையில் அவரால் 36 போட்டிகளில் 14 சதங்கள் அடிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.

அது மிகமிக கடினம். ஆனால், தற்போதைய கிரிக்கெட் உலகில் அதைச் செய்யக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால், அது விராட் கோலி தான் என்கிறார்.

2027 உலகக் கோப்பைக்கு முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட போட்டிகள், ஆசிய கோப்பை, உலகக் கோப்பை போட்டிகள் என சேர்த்தாலும் அதிகபட்சம் 30 போட்டிகள் இருக்கலாம்.

ஆனால், பெரிய இடைவெளிகளுக்கு இடையே நடக்கும் இத்தகைய போட்டிகளில் ஒரே ஃபார்மேட் விளையாடும் கோலி 100 சதங்கள் அடிப்பது மிகவும் சவாலான விசயமாகவே பார்க்கப்படுகிறது.

– நன்றி: புதிய தலைமுறை

Comments (0)
Add Comment