உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டிய தமிழன்!

கண்ணதாசன் புகழாரம்
எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பல களங்களில் இயங்கிய வெ. சாமிநாத சர்மா, “நான் எழுதுவதற்காக வாழ்கிறேன். வாழ்வதற்காக எழுதவில்லை” என்று அறிவித்தவர்.
 
உலக நாடுகள், தலைவர்கள் பற்றியும், உலக இலக்கியங்கள் பற்றியும் தமிழ் வாசகர்களுக்கு விரிவாக அறிமுகம் செய்தவர்.
 
கடித இலக்கியம், குறுநாவல், சிறுகதைகள், வாழ்வியல், இதழியல், மொழிபெயர்ப்பு எனப் பல்துறை வழியே தமிழுக்குத் தொண்டாற்றியவர்.
 

இவர் எழுதிய நூல்கள் சுமார் 80. படைப்பிலக்கியத்திற்கும் கணிசமாகப் பங்களித்திருக்கிறார்.

எனினும் இவர் நினைவுகூரப்படுவது நாட்டு வரலாறுகளுக்கும், வாழ்க்கை வரலாறுகளுக்கும், அரசியல் ஆய்வுக் கட்டுரைகளுக்காகவும்தான்.

சாமிநாத சர்மாவின் நூல்களால் பயன் பெற்றவர்கள் பலர். அவர்களில் ஒருவர் கண்ணதாசன்.

தமிழறிஞர் வெ.சாமிநாத சர்மா பற்றி கவியரசர் கண்ணதாசன் :

“உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா?

எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவில் இருபது சதவீதம் சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே” என்று கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment