சௌகார் ஜானகி நடித்த ரசனைக்குரிய காட்சி!

கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘இருகோடுகள்’ படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனுக்கு இரண்டு மனைவிகள். 

முதல் மனைவியான சௌகார் ஜானகிக்கு குழந்தை இல்லை. அரசு அதிகாரியாக உயர் பொறுப்பில் இருப்பார்.

இரண்டாவது மனைவியான ஜெயந்தி கதாபாத்திரத்திற்கு குழந்தைகள் உண்டு.

வீட்டின் குடும்பத் தலைவியாக மட்டுமே இருக்கும் ஜெயந்தி, சௌகார் ஜானகியின் வீட்டிற்குள் நுழையும்போது பிரம்மித்துப் போவார்.

எல்லாம் அதனதன் இடத்தில் அழகான ஒழுங்கமைப்புடன் இருப்பதைப் பார்த்து, “வீட்ட ரொம்ப சுத்தமா, ஒழுங்கா வச்சிருக்கீங்களே” என்று கேட்கும்போது, குழந்தையில்லாத வெறுமையை வெளிக்காட்டும் விதத்தில்,

“இந்தப் பொருட்களை எல்லாம் களைச்சுப் போடறதுக்கு என் வீட்டில் குழந்தைகள் இல்லையே” என்று சொல்லும் காட்சியும் பாலசந்தரின் கூரான வசனமும் சௌகார் ஜானகியின் மிடுக்கான தோற்றமும் அவ்வளவு ரசிக்கத் தக்கதாக இருக்கும்.

Comments (0)
Add Comment