நூல் அறிமுகம் :
‘அம்பேத்கரின் ஆசான் புத்தர்’ நூலின் ஆசிரியரான சமநீதி எழுத்தாளர் ஏ.பி.வள்ளிநாயகம், அம்பேத்கர் – பெரியார் இருவரையும் தமக்கான சமூக – அரசியல் – இலக்கியப் பணிகளுக்கான வழிகாட்டியாகவும், ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆதரவுத் தளத்தில் செயற்பாட்டாளராகவும்,
சாதி ஒழிப்பு மற்றும் சமூக சமத்துவத்திற்கான கருத்தியல் உருவாக்கத்தில் ஏறத்தாழ 25 நூல்களின் எழுத்தாளராகவும், 30 ஆண்டுகளுக்கும் மேலான முழு நேரப் பொது வாழ்க்கைப் பணியாளராகத் தம்மை அர்ப்பணித்தவர்.
அம்பேத்கரின் கூற்றுப்படி, எந்தவொரு மனிதனுக்குமான இயல்பான சுயநலத்துடன் கூட முரண்படாத வகையில், அறிவு நாணயத்தோடு தம் வாழ்க்கையையும் கருத்தியலையும் தகவமைத்துக் கொண்டவர்.
ஏ.பி. வள்ளிநாயகம் இந்நூலில், “புத்தர் ஒருபோதும் தன்னை இறுமாப்புடன் பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை.
அவர் ஒரு மனிதனின் மகனாகப் பிறந்தார். தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே எண்ணினார். தன்னுடைய கொள்கைகளை ஒரு சாதாரண மனிதனாகவே பிரச்சாரம் செய்தார்.
அவர் தன்னை இயற்கையை மீறியவராக ஒருபோதும் சித்தரித்துக் கொண்டதில்லை.
தனக்கு இயற்கையை மீறும் ஆற்றல் இருப்பதாகவும் அவர் சொன்னதில்லை.
தன்னிடம் இயற்கையை மீறிய ஆற்றல் இருப்பதாக நிரூபிக்க, அவர் அதிசயங்கள் எதையும் நிகழ்த்தியதுமில்லை.
புத்தர் – மார்க்கப் பாதைக்கும் மோட்சப் பாதைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக்கினர்.
ஏசு, முகம்மது மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் தங்களை மோட்சத்திற்கான வழிகாட்டிகளாகச் சித்தரித்துக் கொண்டனர்.
புத்தர் தன்னை மார்க்கத்திற்கான வழிகாட்டியாக சித்தரித்துக் கொள்வதிலேயே நிறைவடைந்தார்.” என்பதை விளக்கமாக எழுதியுள்ளார்.
*********
நூல்: அம்பேத்கரின் ஆசான் புத்தர்
ஆசிரியர்: ஏ.பி. வள்ளிநாயகம்
எதிர் வெளியீடு
விலை: ரூ. 143/-