சிஷ்யனுக்கு நடிக்கச் சொல்லித் தரும் குரு!

அருமை நிழல் :

இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன் அவர்களின் வீட்டில் அவரது வரவேற்பறையை அலங்கரிக்கும் படம் இது.

‘கெமிஸ்ட்ரி‘ என்று சொல்வார்களே அது இதில் அப்பட்டமாக வெகு சிறப்பாக வெளிப்படும்.

கதாநாயகி வெட்கப்படுவது முதல் சிரிப்பு, அழுகை என்று நவரசங்களையும் இயக்குநர் நடித்துக்காட்டுவார்கள்.

அதில் இயக்குநர் பாரதிராஜா சாரும், கமல் சாரும், பாக்கியராஜ் சாரும் கைதேர்ந்தவர்கள். இவர்கள் நடிப்பதில் பாதி நடித்தாலே போதும். அவ்வளவு ஜீவன் இருக்கும் நடிப்பில்.

ஒரு படத்திற்காக கதாநாயகி எப்படி வெட்கப்பட வேண்டுமென்று குருநாதர் விளக்குவதைக்கேட்டு, உடனே குளத்தில் இறங்கி நடித்துக் காட்டிய புகைப்படம்.

எவ்ளோ அழகான முகபாவனை இருவருக்கும்.

– நன்றி: காதல் சுகுமார் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment