இசைக் கூடத்தில் உணவருந்தும் இசைஞானி!

அருமை நிழல்:

“இசையின் மீது தான் கொண்டிருந்த ஈடுபாட்டினால், அந்தந்தப் பருவ வயதிற்கேற்ற பல இயல்பான செயல்பாடுகளை நான் இழந்திருக்கிறேன். அப்படி பலவற்றை இழந்துதான் இந்த இசையை கற்றுக் கொண்டிருக்கிறேன்”

– என்று பல நேர்காணல்களில் தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கும் இசைஞானி இளையராஜா, அன்னக்கிளி முதல் சிம்பொனி வரை என இன்றும் இடையறாது இசைப் பணி ஆற்றி வருகிறார்.

எளிமையான உணவையே எப்போதும் விரும்பும் இயல்பு கொண்ட இளையராஜா, தான் பணியாற்றும் இசைக் கூடத்திலேயே சகக் கலைஞர்களுக்கிடையே அமர்ந்து உணவருந்தும் காட்சி தான் இது.

Comments (0)
Add Comment