நான் நடிகனானது சரியா, தப்பா?

பதிலளித்த ஓவியர் கோபுலு, நெகிழ்ந்த சிவகுமார்

“நான் ஒரு நடிகன் என்ற அடையாளத்துடன் ஓவியர் கோபுலுவைச் சந்திக்க விரும்பலே. ஓவியனா அவரைச் சந்திக்கவே விரும்பினேன்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் ஓவியம், தஞ்சாவூர் கோயில், சென்னை பாரிஸ் கார்னர் ஓவியங்களை எடுத்துப் போய் அவரிடம் காட்டினேன்.

“நீங்க நடிகரா, ஓவியரா?” என்று கேட்டார்.

“ஓவியன்தான் முதலில்… பிறகுதான் நடிகன்!” என்றேன்.

என் படைப்புகளைக் கூர்ந்து கவனித்துவிட்டு, “கையைக் குடுங்க” என்று வாங்கி இடது கையில் வைத்து, தனது வலது கையால் என் விரல்களைத் தடவிக் கொடுத்து, “ஓ.. வாட் ஏ வொண்டர்ஃபுல் ஹேண்ட்” – அப்படின்னாரு.

கண்ணிலிருந்து கடகடன்னு கண்ணீர் வடிந்தது.

“என்னாச்சு?”ன்னு கேட்டாரு.

“வாழ்வின் கடைசி மூச்சு வரைக்கும் ஓவியனாகவே வாழணும்னு ஆசைப்பட்டு சென்னை வந்தேன். இப்போ நடிகனா மாறிட்டேன். நான் எடுத்த முடிவு சரியா தப்பான்னு அப்பப்ப மனசாட்சி கேட்கும்!” அப்படின்னேன்.

“யூ ஹேவ் டேக்கன் ஏ ரைட் டெசிசன்” அப்படீன்னாரு.

“தமிழ்நாட்டில ஓவியரா தொழில் செய்ய ஆரம்பிச்சிருந்தீங்கன்னா ஸ்கூட்டருக்கு பெட்ரோல் கூட வாங்கி ஊத்த முடியாது.

40 வருஷம், 50 வருஷம் ஓவியக் கலைக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிச்ச ஓவியர்கள் ஒரு ‘பிளாட்’ கூட சொந்தமா வாங்க முடியலே. நீங்க விரும்பற வரைக்கும் சினிமாவுல நடிங்க. அப்புறம் கூட ஓவியங்கள் வரையலாம்!” அப்படின்னாரு.

– இந்து தமிழ் திசை நாளிதழுக்கு திரைக்கலைஞரும் ஓவியருமான சிவகுமார் ஓவியர் கோபுலு பற்றி பகிர்ந்து கொண்டவை.

  • நன்றி: இந்து தமிழ் திசை
 
Comments (0)
Add Comment