விஷாலின் அனுபவம் இல்லாத கேள்வி!

செய்தி:

அனுபவமே இல்லாத அமைச்சர் ராஜ் மோகனுக்கு திரைப்படத்துறையை ஒதுக்குவதா? 

– நடிகர் விஷால் கேள்வி.

கோவிந்த் கமெண்ட்:

ஏன் இதற்கு முன்பு தகுதி தராதரமெல்லாம் சரிபார்க்கப்பட்டுதான் இலாகா ஒதுக்கீடு இங்கு நடந்திருக்கிறதா?

டாக்டர் பட்டம் பெற்றவர்கள்தான் சுகாதாரத்துறை அமைச்சர்களாகி இருக்கிறார்களா?

சென்ற ஆட்சியில் அப்படிப் பொறுப்பேற்ற மா.சுப்ரமணியனைப் பார்த்து யாரும் இப்படிப்பட்ட கேள்விகளெல்லாம் கேட்கவில்லை.

இப்போது, விஷால் கேட்கிறார் என்றால், அவர் கொஞ்சம் நேற்றைய வரலாற்றையும் புரட்டிப்பார்த்துக் கொள்வது அவருக்கு நல்லது.

Comments (0)
Add Comment