பிக்காசோவின் நீலப் பருவம்!

கலை விமர்சகர் இந்திரன்

பிக்காசோ (Pablo Picasso) 19ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான நவீன ஓவியர்.

இவர் தனது கலை வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் உருவாக்கிய மிகவும் உணர்ச்சிமிக்க ஓவியக் காலம் தான் Blue Period.

இந்த காலத்தில் அவர் தீட்டிய ஓவியங்கள் பெரும்பாலும் நீல நிறத்தின் பல்வேறு நிழல்கள் கொண்டு உருவாக்கப்பட்டவை.

இது ஏன் “Blue Period (1901–1904)” என்று அழைக்கப்படுகிறது?

இந்த காலத்தில் அவர் தீட்டிய ஓவியங்களில்:

*நீல நிறமே ஆதிக்கம்
*சோகமும் தனிமையும்
*வறுமை, பிச்சைக்காரர்கள், குருடர்கள், கைதிகள் போன்ற சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள்

இந்தக் காரணங்களால் இதற்கு Blue Period என்று பெயர் வந்தது.

இந்த காலத்தின் பின்னணி:

1901-ல் பிகாசோவின் நெருங்கிய நண்பர் Carlos Casagemas தற்கொலை செய்துகொண்டது அவருக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது.

அந்த மனச்சோர்வு அவரது ஓவியங்களில் நீல, சோக உலகமாக வெளிப்பட்டது.

இந்த பருவத்தின் முக்கிய அம்சங்கள்:

1 நீல, நீல-பச்சை நிறங்கள்
2 மெலிந்த, துயரமான மனித உருவங்கள்
3 ஏழைகள், குருடர்கள், கைதிகள்
4 அமைதியான ஆனால், ஆழமான மன வேதனை ஆகியவை இந்த காலத்தின் முக்கிய ஓவியங்களாக அமைந்தன.

The Old Guitarist (1903)
La Vie (1903)
The Blind Man’s Meal (1903)
Woman with Folded Arms (1902)

கலை வரலாற்றில் அதன் முக்கியத்துவம்:

Blue Period மூலம் பிகாசோ உணர்ச்சியை, நிறம் மூலம் வெளிப்படுத்தும் கலை மொழியை உருவாக்கினார். மனிதத் துயரங்களைக் கலை வடிவமாக மாற்றினார்.

இந்த காலத்திற்குப் பிறகு அவர் Pablo Picasso’s Rose Period என்ற மற்றொரு பாணிக்கு மாறினார்.

Comments (0)
Add Comment