விவசாயிகள், தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் (VTMS) சார்பாக கருத்தரங்கு ஊட்டியில் (06.03.2026 அன்று) நடைபெற்றது.
இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.M.S. செல்வராஜ் தலைமை வகிக்க, மாவட்டத் தலைவர் திரு. இராமகிருஷ்ணன், முன்னிலை வகிக்க, திரு. இராஜேந்திரன், திரு. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில் மூத்த வழக்கறிஞர் திரு. விஜயன், வழக்கறிஞர், சங்கத்தலைவர் திரு. சந்திரபோஸ், திரு. வீரசெல்வம், திரு. சந்திரமோகன், திரு.விஜயசிங்கம் பலர் கருத்துறை வழங்கினர்.
இதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து உச்சநீதிமன்றத்தில் பூர்வ நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பட்டா கொடுக்க மாற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என கோரியதோடு கீழ்கண்ட விபரங்களையும் தெறிவித்து உள்ளனர்.
1) நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் வட்டங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது கைவசம் இருக்கும் வேளாண் நிலங்களில் வேளாண்மை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் தான் வாழ்கின்றனர்.
இந்த விவசாய நிலங்களுக்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் பட்டா கோரி வருவது தாங்கள் அறிந்ததே.
ஆட்சியாளர்கள் பட்டா கொடுப்போம் என பல முறை உறுதியளித்து உள்ளனர்.
பூர்வ நிலங்கள் தொடர்பாக கடந்த 27-1-2026 அன்று தலைமைச் செயலாளர் தலைமையில், 14 அரசு துறை உயர்மட்ட அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றுள்ளது.
இதில் கூடலூர், பந்தலூர் வட்டாரத்தில் மக்கள் குடியிருக்கும் 3476.13 நிலங்களுக்கு பட்டா கொடுப்பதோடு 34986.28 ஏக்கர் நிலத்தை காடாகமாற்ற உச்சநீதி மன்றத்தில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலத்தில் ஏழை எளிய விவசாயிகள் காலம்காலமாக விவசாயம் செய்வதோடு, இவர்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.
……2…….
நில அளவைப் பதிவேடுகள் துறை (நீலகிரி) திட்டமிட்டு இந்த நிலங்களை அளவீடு செய்யவில்லை என ஐயம்கொள்கிறோம்.
ஆகவே, பிரிவு-17,53 ல் விவசாயிகள் பல ஆண்டுகளாக விவசாய நிலங்களை முறையாக அளவீடு செய்து உச்சநீதிமன்றத்தில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்து பட்டா கொடுக்க ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
2) மலையகத் தமிழர்கள் தங்களது கடுமையான உழைப்பால், டேன்டீ மிக சிறப்பாக லாபகரமாக இயங்கியது தாங்கள் அறிந்ததே.
தற்போது உண்மைக்கு புறம்பான காரணங்களை காட்டி தாயகம் திரும்பிய டேன்டீ தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
• அரசு உத்தரவு 173 ரத்து செய்யப்பட வேண்டும்,
• வருடத்தில் 180 நாட்கள் வேலை செய்தால் முழு பணிக்கொடை வழங்க சட்டம், உள்ளது, ஆனால், டேன்டீ நிர்வாகம் 240 நாட்கள் வேலை செய்தால் தான் முழு பனிக்கொடை என சொல்லி தொழிலாளர்களின் பணிக்கொடை முழுவதும் கிடைப்பது இல்லை.
முழு தொகையும் கிடைக்க முயற்சி எடுக்கவும்,
• ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் வாரிசுக்கு நிபந்தனையின்றி பணி கொடுக்கவும்.
•டேன்டீ நஷ்டம் என்று சொல்லும் நிர்வாகம் பல லட்சம் செலவில் ரோபோ மிசின் வாங்கியது எதற்கு, இது பற்றி நீதி விசாரணை தேவை,
• டேன்டீயில் பல கோடி செலவு செய்து கட்டிய சேரம்பாடி மருத்துவமனையை முறையாக செயல்படுத்த வேண்டும்,
•டேன்டீயை காடாக மாற்றுவது கைவிடப்பட்டு வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு, நிவாரணம் பெற தனிசட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான கோரிக்கை பிரகடனமும் வெளியிடப்பட்டது.
– M.S. செல்வராஜ்