எகிப்தில் உள்ள ஸ்பிங்ஸ் என்கிற மனித முக சிங்க சிலையை உங்களுக்குத் தெரியுமா?
கீசே பகுதியில், பிரமிடுகளுக்குப் பக்கத்தில், சுண்ணாம்புக் கல்லில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான கம்பீரமான சிலை இது.
நான்காயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட மெகா சைஸ் உருவம் இது.
இந்த ஸ்பிங்ஸ் சிலையோட உயரம் 66 அடி. அதாவது அமெரிக்க அதிபர் வாழுற வெள்ளை மாளிகையோட உயரம் இது.
இந்த சிங்க சிலையோட நீளம் 240 அடி. நீட்டிக்கிட்டு இருக்குது பாருங்க 2 கால்கள். அந்த கால்கள் ஒவ்வொன்னும் இரண்டு பேருந்துகளோட நீளம்.
சரி. இந்த சிங்க சிலைக்கு இப்ப என்னன்னு கேட்பீங்க.
ஸ்பிங்ஸ் சிலையோட வலது காலுக்கு கீழ்ப்பகுதியில் ஒரு ரகசிய நுழைவாயில் கதவு இருக்கிறதா சொல்லப்படுது. சிலைக்கு அடியிலே ரகசிய அறைகள், கட்டுமானங்கள் இருக்கிறதாவும் நம்பப்படுது.
‘ஸ்பிங்ஸ் சிலையோட வால்பகுதியிலே அவ்வளவு ஈஸியா யார் கண்ணிலும் படாதமாதிரி ஒரு சின்ன துளை உண்டு. அந்த ஆழமான துளை, 2 ரகசிய அறைகளுக்குப் போற பாதை’ அப்படின்னு டாக்டர் ஹியூஜஸ் அப்படிங்கிற பெண்மணி சொல்றார்.
அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் பிளெட்சூ என்கிற இன்னொரு பெண்மணி, ‘கடவுளின் பறக்கும் தட்டு’ (யூ.எஃப்.ஓ ஆப் காட்) என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
அந்த புத்தகத்திலே, 2013ஆம் வருஷம், ஒரு பெண்மணி எகிப்திய சிங்கச் சிலைக்கு அடியிலே இருக்கிற ரகசிய அறை பற்றிய சில தகவல்களை தனக்குச் சொன்னதா கிறிஸ் பிளெட்சூ குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த பெண்ணோட பெயரை கிறிஸ் பிளெட்சூ குறிப்பிடவில்லை. பெண்மணி (தி லேடி) என்று மட்டும்தான் அவர் அந்த பெண்ணைக்கு குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தப் பெண்மணி என்ன சொன்னாராம்? ‘பழங்காலத்தில் இருந்து அழிந்துபோன அட்லாண்டிஸ் கண்டம் பத்தின பல மர்மங்கள், அதிசய தகவல்கள் அந்த சிங்கச் சிலையோட வலதுகாலுக்கு அடியிலே இருக்கிற ரகசிய அறையிலே இருக்கு. ஒருநாள் அந்த ரகசியம் எல்லாம் வெளியே வரும்’ அப்படின்னு அந்த லேடி சொன்னாராம்.
ரெகுலஸ் என்கிற சிவப்பு நட்சத்திரம் விடியலுக்கு முன்னாடி ஸ்பிங்ஸ் சிங்கச் சிலையோட பார்வைக்கு வரும்போது இந்த உலகத்துக்கு புதிய அறிவு வந்து சேரும்.
அதுவும் 2026ஆம் ஆண்டு (இந்த ஆண்டுதான்) ஈஸ்டர் (உயிர்ப்பு ஞாயிற்றுக்கிழமை) அன்றைக்கு இந்த புதிய அறிவு பூவுலகத்துக்கு வந்துசேரும்’ அப்படின்னு அந்த பெண்மணி சொல்லியிருக்கிறாராம்.
எட்கர் கெய்சின்னு இன்னொருத்தர். இவர், ‘எகிப்து நாட்டு சிங்கச் சிலைக்கு அடியிலே ரகசிய அறையிலே நிறைய பழங்கால ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கு. அவை கண்டுபிடிக்கப்படும்.
2026ஆம் ஆண்டு வானத்திலே ஒரு குறிப்பிட்ட கோணத்திலே சில நிகழ்வுகள் நடக்கும்போது சிங்கச் சிலை ரகசியம் வெளியே வரும். மனிதகுலத்துக்கு புதிய அறிவு அதன்மூலமா வந்து சேரும்’னு சொல்லியிருக்கிறார்.
‘சூரியன் தண்ணீர்ல(?) இருந்து எழும்பணும். நிழலோட கோடு (அதாவது வெளிச்சம்) சிங்கச் சிலையோட இரண்டு கால்களுக்கும் இடையே விழும்போது இது நடக்கும்’ என்கிறது கெய்சியோட கணிப்பு.
சிங்கச் சிலையோட வலது காலுக்கு கீழே இருக்கிற ரகசிய அறையிலே என்னென்ன இருக்கும்?
அட்லாண்டிஸ் கண்டம் பற்றிய வரலாறு, அது வீழ்ச்சியடைந்த ரகசியம். பழங்காலத்திலே இருந்த நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள், ஆன்மிக அறிவு, மனிதர்கள் ஏன் பூமியிலே தோன்றினாங்க? அவங்களோட படைப்பு ரகசியம், படைக்கப்பட்ட நோக்கம். இப்படி பலவகையான ஆவணங்கள் இருக்கிறதா நம்பப்படுது.
நம்ம லெமூரியா அப்பிடிங்கிற குமரிக் கண்டம், கடல் கொண்ட தென்னாட்டு தமிழர்களோட தொன்முது வரலாறு, நம்ம தமிழ் மொழி பற்றிய தரவுகள், தமிழர்களோட பழங்கால கலை, பண்பாடு பற்றின தகவல்கள் கூட ஒருவேளை சிங்க சிலைக்கு அடியிலே இருந்து வெளியே வரலாம்.
அப்படி சிங்கசிலை ஆவணங்கள் வெளியே வந்தா இந்த பூவுலகத்திலே அது ஒரு புது யுகத்தைத் தோற்றுவிக்கும்னு நம்பப்படுது.
வர்ற ஏப்ரல் 5ஆம்தேதிதான் ஈஸ்டர் உயிர்ப்பு நாள். அதேகாலகட்டத்தில்தான் தமிழ்நாட்டிலே சட்டமன்ற தேர்தல் நடக்கப்போகுது.
நம்பிக்கையோடு காத்திருப்போம் மக்களே!
……..
மோகன ரூபன் முகநூல் பதிவு