களங்கமற்ற வாழ்வுக்கான அறைகூவல்!

ஆண்டுதோறும் டிசம்பர் 9-ம் நாள், பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாளாகக் (International Anti-Corruption Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஊழல் என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ அல்லது பதவியையோத் தவறாகப் பயன்படுத்தி, தனிப்பட்ட முறையில் ஆதாயங்களைப் பெற்றுக் கொள்வதைக் குறிக்கிறது. லஞ்சம், கையாடல் (Embezzlement) போன்றவை இதில் அடங்கும்.

ஊழலின் வகைகள்

ஊழல் அதன் அளவு மற்றும் தாக்கத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது;

சிறு ஊழல் (Petty Corruption): பொதுவாக குறைவான எண்ணிக்கையான மக்களிடையே, சிறு சலுகைகள பெறுதல் என்ற அளவில் நடைபெறும் ஊழல்கள்.

பெரும் ஊழல் (Grand Corruption): அரசாங்கத்தைப் பாதிக்கக் கூடிய அளவுக்குப் பெரிய அளவில் நடைபெறும் ஊழல்கள்.

ஒழுங்கமைந்த ஊழல் (Systemic Corruption): நாளாந்த சமூக அமைப்பின் ஒரு பகுதியாகி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கான அறிகுறியாக இருக்கும் வஊழல்கள்.

அரசியல் ஊழல் (Political Corruption): அரசாங்கத்தின் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் அல்லது பிற அரசுப் பணியாளர்கள், அலுவல் முறையில் தனிப்பட்ட நலன்களுக்காகச் செயல்படுதல், (அரசியல் துறைப் பேராசிரியர் ஸ்டீபன் டி, மொரிசுவின் கூற்றுப்படி, இது தனிப்பட்ட நலன்களுக்காகப் பொது அதிகாரத்தைச் சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்துவதாகும்.)

ஊழலின் மிக மோசமான விளைவுகள்

ஊழல் என்பது வெறுமனே நிதி சார்ந்த இழப்பு மட்டுமல்ல; அது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகளைச் சிதைக்கும் ஒரு புற்றுநோயாகும்.

1. பொருளாதாரச் சீரழிவு:

ஊழல், அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்துவதால், வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி குறைகிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஊழல் நிறைந்த நாடுகளில் முதலீடு செய்யத் தயங்குவதால், பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறது.

லஞ்சம் காரணமாக, வணிகம் செய்வதற்கான செலவு அதிகரித்து, பொருட்களின் விலை உயர்கிறது (Cost of doing business).

2. சமூக நீதியின் மறுப்பு:

ஏழைகளுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் சென்று சேர வேண்டிய பொதுச் சேவைகள் (கல்வி, சுகாதாரம் போன்றவை) தரத்தில் குறைகின்றன அல்லது அவர்களுக்குக் கிடைக்காமல் போகின்றன.

தகுதியற்றவர்கள் லஞ்சம் கொடுத்துப் பதவிகளைப் பெறுவதால், திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

இது சமத்துவமின்மையை மேலும் அதிகரிக்கிறது.

3. ஜனநாயகத்தின் பலவீனம்:

ஊழல, சட்டத்தின் ஆட்சியைப் (Rule of Law) பலவீனப்படுத்துகிறது. ஊழல்வாதிகள் தண்டிக்கப்படாமல் தப்பிப்பதைக் கண்டு மக்கள் சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கின்றனர்.

அரசு நிர்வாகத்தின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை குறைகிறது. இது அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் அதிருபதிக்கு வழிவகுக்கும்.

தேர்தல் செயல்முறைகளிலும் ஊழல் நுழைந்தால் ஜனநாயகத்தின் அடித்தளமே ஆட்டம் காண்கிறது.

4. இளைஞர் மற்றும் அடுத்த தலைமுறைக்கான சவால்:

நேர்மையற்ற வழியில் செல்வந்தர்களாகும் நபர்களைப் பார்த்து, இளைய தலைமுறையினர் தவறான முன்மாதிரிகளைப் பின்பற்றத் தொடங்கலாம். இது நெறிமுறையற்ற சமுதாயத்தை உருவாக்கும்.ஊழல் ஒழிப்பு: ஒரு கூட்டுப் பொறுப்பு

மக்கள், ஆண்டுக்கு வருமுறை ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரித்துவிட்டு, மற்ற நாட்களில் மாமூல வாழ்க்கையை தொடர்வதால் ஊழல் ஒழிப்பில் எந்த முன்னேற்றமும் அடைய முடியாது; என்பது மிகவும் உண்மை.

ஊழல் ஒழிப்பில் அரசுக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பங்குண்டு.

தனிமனிதப் பங்கு:

சட்ட விதிமுறைக்கு உட்பட்ட காரியத்திற்குகூட லஞ்சம். கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில விட வேண்டும். லஞ்சம் கேட்பவரிடம், லஞ்சம் ஏன் கொடுக்கணும்’ என தைரியமாகக் கேட்க வேண்டும்.

சுய கட்டுப்பாடு:

வெளியில் இருந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைவிட தமக்குத்தாமே விதித்துக்கொண்ட வழுக்கக் கட்டுப்பாடுகள் நிச்சயமாக நல்ல பலனைத் தருகின்றன.

பெற்றோர்-ஆசிரியரின் பங்கு:

ஊழலுக்கு எதிரான உணர்வை, இளைய தலைமுறையினருக்கு ஊட்ட வேண்டிய பொறுப்பில் பெற்றோர்களும், ஆசிரியர்களுமே பெரும்பங்கு வகிக்கின்றனர்.

படிப்பை மட்டும் கற்றுக்கொடுக்காமல களங்கமற்ற மனிதர்களாக வாழ்வில் நிகழும் வழிமுறைகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

2025-ம் ஆண்டின் ஊழல் கருத்தறிவு குறியீடு (Corruption Perceptions Index – CPI) படி, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்ட 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 96ஆவது இடத்தில் உள்ளது. 

ஊழல் எதிர்ப்பு நாள் 2025இன் தீம் “Uniting with Youth Against Corruption: Straping Tomorrow’s integrity (ஊழல் ரீதிராக இளைஞர்களுடன் வன்றிணைதல்: நாளைய தேர்மையை வடிவமைத்தல்) என்பது ஊழல் வழிப்பில் இளைய தலைமுறையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஊழலுக்கு அடிபணியாமல் பணியாற்றுபவர்களை ஊக்கப்படுத்துவதும், நமது அன்றாட வாழ்வில் நேர்மையைப் பேணுவதுமே உண்மையான ஊழல் எதிர்ப்பு நாள் கொண்டாட்டமாக அமையும்.

– நிலவளம் ரெங்கராஜன்

  • நன்றி – ஆந்தை ரிப்போர்ட்டர்
Comments (0)
Add Comment