அதென்ன ‘மினிமலிஸ்ட் வாழ்க்கை’?

கலை விமர்சகர் இந்திரன் விளக்கம்

தமிழில் ‘சிறுநுகர் வாழ்வு’ எனச் சொல்லலாம்.

77 வயதில் ஒரு குறுக்குச் சந்தில் வந்து நிற்கிறேன். எனது மாமன் மகளாக, இளம் பருவத்துத் தோழியாக, எனது சிறுசிறு ஆசைகளையும் நிறைவேற்றும் அன்பான ஒரு வாழ்க்கைத் துணைவியாக இருந்த என் மனைவியை இழந்த காயம் இன்னும் ஆறவில்லை.

என்னைச் சுற்றிப் பார்க்கிறேன். வாழ்க்கையை மறுபரிசீலனை செய்கிறேன். “சிறுநுகர் வாழ்வு” வாழ ஆசைப்படுகிறேன்.

நான் வாழ விரும்பும் வாழ்க்கை பற்றி ஒரு காகிதத்தில் எழுதிப் பார்க்கிறேன்.

உலகில் மினிமலிச வாழ்க்கை வாழ்ந்த மனிதர்களை அலசிப் பார்க்கிறேன். எனக்குக் கிடைத்த வழிகாட்டல்கள் இவை.

1) டூப்ளிகேட்களை துரத்துமாறு மினிமலிஸ்டுகள் எனக்குச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் வழிமுறை இதுதான் :

ஒரு பெரிய பெட்டியைத் தயார் செய்துகொள்ளவும். உங்கள் வீட்டை ஒரு ரவுண்ட் அடிக்கவும்.

ஒரே படத்தின் இரண்டு சிடி இருக்கிறதா? ஒன்றை பெட்டியில் வைத்து மூடவும். வெள்ளைச் சட்டை மூன்று இருக்கிறதா? இரண்டை பெட்டிக்குத் தள்ளவும். பெல்ட் எத்தனை இருக்கின்றன? அதுவும் பெட்டிக்கே.

எல்லாம் முடிந்ததும், அந்தப் பெட்டியை மூடி அதன் மேல் “டூப்ளிகேட்” என எழுதி கண்ணில் படாத இடத்தில் வைத்துவிடுங்கள்.

30 நாட்களுக்கு அந்தப் பெட்டியில் இருந்து எதுவுமே உங்களுக்கு தேவையில்லை என்றால், அந்தப் பொருட்களை யாருக்காவது கொடுத்து விடுங்கள்.

3) எடை குறைந்த பயணங்கள்:

ஒரு நாள் பயணத்துக் சூட்கேஸை எடுக்கும் ஆளா நீங்கள்? வழக்கமாக எடுத்து வைக்கும் பொருட்களில் பாதியை எடுக்கவும்.

நான்கு நாட்களுக்கு இரண்டு சட்டைகள் போதும். துவைத்துப் பயன்படுத்தலாம். இரண்டு ஷூக்கள் தேவையில்லை. ஒன்று மட்டும் எடுத்து வையுங்கள்.

மொபைல், டேப்லட், லேப்டாப் எல்லாம் இருக்கிறதா? எது வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். குறைந்த லக்கேஜுடன் பயணிப்பதின் சுகத்தை அனுபவியுங்கள்.

4) ரிப்பீட் உணவு:

ஒரு வாரம் முழுக்க தினமும் காலையில் இட்லி. மதியம் எதாவது ஒரே ஒரு வகை சாப்பாடு. இரவில் சப்பாத்தியோ, தயிர் சாதமோ. ஆனால், அந்த வாரம் முழுவதும் அதுதான்.

ஒரு வாரம் கழித்து யோசித்துப் பாருங்கள். என்ன என்ன பலன்கள், என்ன என்ன குறைகள் என்பதைப் பட்டியலிட்டுக் கவனியுங்கள்.

5) எண்ணிக்கை குறைவான உடைகள்:

மூன்று மாதங்களுக்கு 20 உடைகள் மட்டுமே.

அதாவது சட்டை, பேண்ட், ஷூ தொடங்கி உள்ளாடை வரை உங்களுக்கு தேவையான காஸ்ட்யூம் வகைகளில் 20 மட்டும் எடுத்து வைக்க வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு அதையேதான் மாற்றி மாற்றி அணிய வேண்டும். முயற்சி செய்து பாருங்கள்.

இவர்கள் மேலே சொன்ன சிறுநுகர் வாழ்வு நாம் விடுதலை அடைய உதவும் ஒரு கருவி என்று தோன்றுகிறது. முயற்சி செய்து பார்த்து, பிறகு சொல்கிறேன் வெற்றி பெற்றேனா என்று.

Comments (0)
Add Comment