பழைய படங்கள் கிளர்த்தும் நினைவுகள்!

கவிஞர் கலாப்ரியா

1985. ஒரு காலத்தில் முழுக்கை சட்டை போட்டு இப்படி மடித்து விட்டுக் கொள்வதென்றால் பிடிக்கும். அப்போதைய ஒல்லியான உடல் வாக்கை மறைக்கவும் அப்படிச் செய்த நினைவு.

யூனிஃபார்ம் சட்டை கண்டிப்பாக அரைக்கைதான் போடவேண்டும் அதிலிருந்து மாறுபாடாக இருக்கவும் முழுக்கை போடுவோம்.

அதை அரைக்கை சட்டையாக மாற்றிக் கொண்டால் ஒரு இருபது பாய்ண்ட் துணி மிச்சம் என்று அரைக்கைச் சட்டைக்கு மாறிக் கொள்ள நேர்ந்ததும் உண்டு.

அது வருடத்திற்கு இரண்டு சட்டை மட்டுமே தைத்துக்கொள்ளமுடிகிற கட்டாயக் காலம், நண்பர்களின் சட்டையைப் போட்டுக் கொண்டு அலைந்த பஞ்ச காலம் அது.

ஏதோ ஒரு வேலை கிடைத்ததும் மீண்டும் முழுக்கை.

அது ஏனோ பிடிக்காமல் போக மறுபடி ஹால்ஃப் ஸ்லாக். வீட்டில் இருக்கையில் மருதுவின் ஓவியங்கள்போல சட்டையில்லாத வெற்று மார்பு. காலம் கழிகிறது. ஒரு வகையில் நெருங்கி விட்டது.

இந்தப் படம் 1983 வாக்கில் எடுத்தது. நாற்பது வருட நினைவுகளில் ஒரு ரோலர் கோஸ்டர் போல ஏறி இறங்கி.

Comments (0)
Add Comment