திரையுலகில் நடிகர், கதை, வசனம், நகைச்சுவை போன்ற திறமையால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் கிரேசி மோகன்.
நடிகர், மரபுக் கவிஞர், ஓவியர் என மூன்று துறை வல்லுநராகத் திகழ்ந்த ஒரு முப்பரிமாணப் பிரமுகர் கிரேஸி மோகன்.
கலைமாமணி விருது பெற்ற கிரேஸி மோகன், உலக நாயகன் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், மகளிர் மட்டும், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் மற்றும் மன்மதன் அம்பு படம் வரை இணைந்து பணியாற்றி உள்ளார்.
இதில், கமல் உருவாக்கிய மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்று ‘மைக்கேல் மதன காமராஜன்’.
இந்தப் படம் ரிலீசாகி 30 ஆண்டுகள் கடந்துவிட்டது. மிகப்பெரிய வெற்றிப் படம் என்பதைத் தாண்டி, பலரின் எவர்க்ரீன் ஃபேவரைட் காமெடி படங்களில் இதுவும் ஒன்று.
படம் முழுக்க ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த படம் மைக்கேல் மதன காமராஜன். இதில் கமல் 4 வேடங்களில் நடித்திருப்பார். அதிலும் படத்தின் பிற்பகுதியில் கெட்-அப்பை மட்டும் மாற்றி, நான்கு கேரக்டரையும் வித்தியாசப்படுத்தி காட்டி இருப்பார் கமல்.
இந்தப் படத்தில் 4 கேரக்டர்கள் ஏற்பட நான்கு விதமாக உச்சரிப்புக்களை மாற்றி கமல் நடித்திருந்தார். கமல் கேட்டுக் கொண்டதால் இந்தப் படத்திற்காக ஊர்வசி தனது சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசி இருந்தார்.
படத்திற்கு இசை இளையராஜா. படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதில் ‘சுந்தரி நீயும்’ பாடல் முழுக்க முழுக்க ஸ்லோ மோஷனில் எடுக்கப்பட்டது. முற்றிலும் ஸ்லோமோஷனில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் பாடல் இது தான்.
யேசுதாஸ் பிஸியாக இருந்ததால், இந்தப் பாடலை கமலே பாடினார். ‘ரம்பம்பம்’ பாடலுக்கு பிரபுதேவா தான் நடனம் அமைத்திருந்தார்.
இப்படத்தின் க்ளைமேக்சிற்காக 3 இடங்களில் செட் போடப்பட்டது. வீட்டின் உள்ளே நடக்கும் காட்சிகள் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட செட்டில் படமாக்கப்பட்டது.
மற்றொன்று குன்னூரில் 30 அடி உயரத்தில் மலை உச்சியில் அமைக்கப்பட்டது. இதற்காக ஒட்டுமொத்த டீமும் கணித நிபுணர்களைப் போல் கணக்கிட்டு, ஆய்வு செய்துள்ளது.
1990-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடப்பட்ட இந்தப் படம் தொடர்ந்து 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.
பி.கு – ‘மைக்கல் மதன காம, ராஜன்’ திரைப்படத்தின் படப்பின் இடைவெளியில் படக்குழு எடுத்துக் கொண்ட புகைப்படம்.
– நன்றி: முகநூல் பதிவு