கழுவேற்றுதல் மிகவும் கொடுமையான தண்டனை. இருதயத்தைப் பதைக்கச் செய்யும் தண்டனை. சமணர்களை சைவர்கள் கழுவேற்றியதாக வரலாறு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கத்தில் இத்தண்டனை இருந்தது. கழுவன்திட்டு அல்லது கழுவன்தட்டு என்று அழைக்கப்படும் இடம் கன்னியாகுமரியில் உண்டு.
திட்டு என்றால் திடல். அதில் பல கழுமரங்கள் நடப்பட்டிருந்தன. குற்றுயிரும் குலையுயிருமாக கழுவேற்றபட்டவர்கள் அக்கம்பங்களில் துடித்துக்கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு.
வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக, சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் கோபுரத்தில் காணப்படும் சிற்பங்களில் இக்காட்சி இடம்பெற்றுள்ளது.
நெருங்கிப் பார்க்கையில்தான் கோபுரத்தின் அருமை தெரிகிறது. தேனடையில் அப்பியிருக்கும் தேனீக்கள்போல் எந்த இடத்தையும் விடாமல் சிற்பங்களால் நெருக்கிச் செய்துள்ளனர்.
தமிழகத்தில் இருக்கும் எந்தக் கோயில் கோபுரத்தை விடவும் அதிக சிற்பங்கள் இடம் பெற்றிருக்கும் கோபுரம் இதுவாகத்தான் இருக்கும்.
இக்கோபுரம் உருவாக்கப்பட்ட வரலாறு ஒன்று உண்டு. அதைப் பின்னால் எழுதுகிறேன்.
நன்றி: பேஸ்புக் பதிவு