“பெரிய அளவிலே உள்ள கார்களைத் தான் அந்தக் காலத்திலே உள்ள நடிகர்கள் பயன்படுத்துவார்கள்.
எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் பயன்படுத்திய கார் பியூஷ்-8.
கலைவாணர் அவர்களிடம் இருந்த கார் ‘கேடிலாக்’. இதை உடுமலை நாராயணகவி அவர்கள் “கேடு இல்லா மனிதர் கேடு இல்லா காரில் பயணம் செய்கிறார்” என்பார்.
டி.ஆர்.மகாலிங்கத்திடம் இருந்த கார் ‘செவர்லெட்’.
தயாரிப்பாளரும், திரைப்பட இயக்குநருமான எஃப்.நாகூர் அவர்கள் பயன்படுத்திய கார் ‘டெஸோட்டா’.
நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் பயன்படுத்திய கார் ‘பிளைமௌத்.
நியூட்டன் ஸ்டூடியோவின் பங்குதாரர்களில் ஒருவரான உமா பிக்சர்ஸ் ராமநாதன் செட்டியாரிடம் இருந்த கார் ‘ஹம்பர்’.
இவைகள் எல்லாம் விலை உயர்ந்த, வசதி படைத்த கார்கள்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பயன்படுத்திய கார் ‘அம்பாஸிடர்’ மட்டுமே.
எளிமையாக இருப்பதையே விரும்பினார் எம்.ஜி.ஆர்.”
– எஸ்.எம்.உமர் எழுதிய ‘கலை உலகச் சக்ரவர்ததிகள்’ என்ற நூலில் இருந்து ஒரு பகுதி.