முழு வேகத்தில் எழுதிக் கொண்டிருந்த பொற்காலம்!

எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அனுபவம்
அருமை நிழல்:
 
1986 முதல் 1990 வரை க்ரைம் நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்ற ஒரு அற்புதமான பொற்காலம்.
 
நான் முழு வேகத்தில் எழுதிக் கொண்டிருக்க, தம்பி அசோகன் க்ரைம் நாவலுக்கான அட்டைப் படங்களை வடிவமைப்பதில் தூள் கிளப்பிக் கொண்டிருந்தார்.
 
நான் மாதம் இருமுறை சென்னை சென்று அட்டைப்பட ஆலோசனைகளில் கலந்து கொள்வேன். சில நேரங்களில் வாக்குவாதங்களும் நடக்கும்.
 
நான் சொல்லும் ஆலோசனைகள் சில நேரங்களில் சரியாக இருப்பதை பாராட்டும் வகையில் அசோகன் அடிக்கடி சொல்லும் வார்த்தை.
 
“அண்ணே….. நீங்க கில்லியண்ணே”
 
பி.கு.:
 
இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் பின்னாளில் திரைப்பட இயக்குநராகப் புகழ்பெற்ற கே.வி.ஆனந்த்.
Comments (0)
Add Comment