அற்புதமாக இளகிய முகம்…!

எழுத்தாளர் வண்ணதாசன்
 
ரசிக்க சில வரிகள்:
 
“எல்லார்க்கும் கடைசியில் பட்டுச் சேலையும், பூவுமாக ஒரு பெண் சூம்பிப்போன காலில் கையை ஊன்றி வந்து கொண்டிருந்தாள்.
 
அற்புதமாக முகம் இளகிக் கிடந்தது. மந்தை கலையாமல் அடைத்து மேய்த்து வருகிறது போல், கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள்.
 
மேளம் ஜமுக்காளத்தில் அமர்ந்து விட்டிருந்தது. நாதஸ்வரம் இரும்பு நாற்காலிகளில் இருந்தவர்களிடம் போய் முட்டியது.
 
சுற்றிக் கொட்டிண ஆரத்தியை, மண் உறிஞ்சிக் கிள்ளின வெற்றிலை பளபளத்தது”.
 
– வண்ணதாசனின் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ சிறுகதையிலிருந்து ஒரு பகுதி.
 
Comments (0)
Add Comment