ஜீபே மூலம் நடக்கும் நவீனக் கொள்ளை!

செய்தி:

சென்னையில் பரவி வரும் புதிய கொள்ளைக் கலாச்சாரம் – ஜீபே மூலம் பணம் பறிக்கும் கும்பல்.

கோவிந்த் கமெண்ட்:

பணமதிப்பிழப்பிற்கு பிறகு ஜீபே, பே.டி.எம் என்று செல்போனில் உள்ள நவீன தொழில்நுட்ப வசதி மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவித்தது மத்திய அரசு.

அப்போதே ஏ.டி.எம் கார்டை முறைகேடாக பயன்படுத்தி, ஏ.டி.எம் மையங்களில் ஒரு கும்பல் திருடுகிறது என்று அடுத்தடுத்து செய்திகள் வெளி வந்தன.

இருந்தாலும் இன்றுவரை அந்தவிதமான ஏ.டி.எம் கொள்ளைகள் நின்றபாடாக இல்லை.

தற்போது ஜீபே, பே.டி.எம் வழியாக பெரும்பாலானவர்கள் பணம் அனுப்பும் வழக்கத்தை மேற்கொண்டு வரும் காலத்தில், இப்போது ஜீபே மூலமும் பணம் பறிப்பதாக சைபர் குற்றப் புகார்கள் அதிகரித்திருக்கின்றன என்கிற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

சராசரி மக்களிடம் கையில் பணப்புழக்கம் சரிவர இல்லாத நிலையில், குறைந்த பட்சமாக அவர்கள் நம்பி அனுப்பும் ஜீபே போன்ற தொழில்நுட்பத்திலும் இப்படிப்பட்ட மோசடிகள் தொடர்ந்து நடந்தால், அதற்கு யார் பொறுப்பேற்பது?

பணப் பரிவர்த்தனைக்கு இந்தவிதமான இழப்புகள் தான் எதிர்வினையா?

 

Comments (0)
Add Comment