தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களுக்கு இசையமைப்பதில் மிகச்சிறந்தவர்கள் சந்தோஷ் நாராயணன் & சாம் சி.எஸ்.
சாம். சி.எஸ். மிகச்சிறந்த இசையை மலையாளப் படங்களில் கொடுத்திருக்கிறார். தன்னை நிரூபித்திருக்கிறார். இந்திய அளவில் அந்தப் படங்கள் ஹிட் ஆனபோதும் தமிழரான அவருக்கு, மிகப் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால், இரண்டே இரண்டு இன்டீ (அதுவே ஒரு ஸ்கேம்தான்… இன்டீ மியூசிக், இன்டீ ஆர்டிஸ்ட் என்றால் எந்தவித இசை தொடர்பான பின்புலமும் இல்லாதவர்களை குறிப்பிடுவது. அதிலேயே ஸ்கேம் செய்கிறது திங்க் இன்டீ) பாடல்களை கொடுத்த சாய் அபயங்கருக்கு அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கு வாய்ப்பு.
கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமா சீரழிவை சந்தித்திருப்பதற்கான காரணங்களில் ஒன்று நெப்போடிசம். பாலிவுட் பாணியில் கோலிவுட்.
காசு வைத்திருக்கும் எவரும் ஹீரோ ஆகிவிட முடியும். அங்கே கதைக்கோ, திரைக்கதைக்கோ மிகப்பெரிய வேலை இல்லை, பில்டப் மட்டுமே போதும்.
எல்லா பெரிய இயக்குநர்களும் நெப்போ குழந்தைகளை விரும்பி வளர்க்கிறார்கள். பாரதிராஜா, சாலையில் எங்கோ பார்த்த ஒரு முகத்தை ஹீரோவாக்கினார் என்பதுபோன்ற தேடல்கள் எதையும் சமீபகால இயக்குநர்களிடம் பார்க்கமுடியாது.
கார்த்திக் சுப்புராஜ் தன் ஆரம்பகால படங்களில் புதிய நடிகர்களையும் புதிய டெக்னீசியன்களையும் அறிமுகப்படுத்தினார். தான் காலூன்றாத அந்த நேரத்தில் அதைச் செய்த அவர், நன்றாக வளர்ந்தவுடன் செய்த வேலை, நெப்போ குழந்தைகளுக்காகவும் பெரிய ஹீரோக்களுக்காகவும் படம் எடுத்தது.
சாய் அபயங்கரைவிட, அசல் கோளாறு, பால் டப்பா போன்றவர்கள் எந்தவிதத்தில் குறைந்தவர்கள்.
முட்டி மோதி வருபவர்களுக்கும் நெப்போ குழந்தைகளுக்கும் திறமை அடிப்படையிலாவது போட்டி இருக்க வேண்டாமா?
மலையாள சினிமாவில் நான் கவனித்த ஒன்று. அங்கு ஒருவர் ஹிட்டாகிவிட்டால் எல்லோரும் அவர் வீட்டு வாசலில் போய் நிற்பதில்லை. திறமையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். வாய்ப்புகளை பகிர்ந்துகொள்கிறார்கள்.
புதியவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும், புதிய புதிய சிந்தனைகளும் படைப்புகளும் அப்போதுதான் சாத்தியமாகும்.
அனிருத்தை கோடிகளில் புரளவைத்து, தமிழ் சினிமா இசையை பின்னோக்கி இழுத்ததுபோல, அடுத்த ரவுண்டுக்கு கோலிவுட் தயாராகிவிட்டது.
ரசிகர்களுக்கு பெரிய நட்டமில்லை, இங்கே இல்லையென்றால் அங்கே. கொரிய இசையோ, ஸ்பானிஷ் இசையோ கேட்டு இன்பமடைவார்கள்.
ஆனால், பின்புலம் இல்லாத எளிய பிள்ளைகள் கலைஞர்களாக கனவுகூட காணமுடியாத சூழலே மிஞ்சுகிறது.
நன்றி: முகநூல் பதிவு.