‘இசை அசுரன்’ ஜி.வி. பிரகாஷ் குமார்!

தமிழ் சினிமா மிகவும் கொண்டாடும், வியக்கும், காதலிக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரின் மருமகனாகவும், பாடகி ஏ.ஆர்.ரைஹானாவின் மகனுமாகத் தான் ஜி.வி.பிரகாஷ் குமாரை திரையுலகம் பார்த்தது.

1993-ல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஜெண்டில்மேன் திரைப்படத்தில் “சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே” பாடல் மூலம் தனது இசைப் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார் ஜி.வி.

ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்துள்ள ஜி.வி.பிரகாஷ், 2006-ல் ‘வெயில்’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் கால் பதித்தார். டார்லிங் படம் மூலமாக ஒரு ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார்.

இவர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் நடித்த சர்வம் தாள மயம் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

பொல்லாதவன் படத்திற்காக இவர் அமைத்த ட்யூன், பல வருடங்களுக்கு பைக் பிரியர்களின் ஹாரன் சத்தமாக இருந்தது.

சூரரைப்போற்று படத்தில்  இசையமைத்ததற்காக 2022- ல் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அளிக்கப்பட்டது.

இசை அசுரனாகிய ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் அமைந்த வெற்றிப் படங்களின் தொகுப்பு.

வெயில்

2006-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் அதிரடிக் குடும்பத் திரைப்படம். இந்தப் படத்தை வசந்தபாலன் இயக்கியுள்ளார்.

இதில் பரத், பசுபதி, ரவி மரியா, பாவனா, ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை ஜி வி பிரகாஷ் குமார்.

பொல்லாதவன்

2007-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்க, தனுஷ், திவ்யா, கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் தீனா.

அங்காடித் தெரு

வசந்தபாலன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம். கருணாமூர்த்தி மற்றும் அருண்பாண்டியன் ஆகியோர் தயாரித்த இந்தப் படத்தை ஐங்கரன் இன்டர்னேசனல் நிறுவனம் வெளியிட்டது.

ஆடுகளம்

வெற்றிமாறன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த படம். GV.பிரகாஷ் குமார் இசையில் வெளிவந்த இந்தப் படத்தில் தனுஷ், டாப்ஸீ, கிஷோர், வ.ஐ.ச. ஜெயபாலன் ஆகியோர் முன்னனிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தெய்வத்திருமகள்

2011ஆம் ஆண்டு வெளிவந்த படம். ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலா பால் என முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் குடும்பத் திரைப்படம்.

மயக்கம் என்ன 

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ரிச்சா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம். தினேஷ் குமார் தயாரித்த இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தெறி

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு மற்றும் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை கலைபுலி எஸ் தாணு இயக்க, ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

அசுரன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த அதிரடித் திரைப்படம். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

ஆயிரத்தில் ஒருவன்

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், பார்த்திபன், ஆண்டிரியா ஆகியோர் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க, ஜி.வி. இசையில் 2010 ஆம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி இந்தப் படம் வெளிவந்தது.  

சூரரைப் போற்று

பெண் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவில் முன்னணி இயக்குனராக புகழ் பெற்றுள்ள சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் “ஏர் டெக்கான்” நிறுவனத்தின் அதிபரான திரு. ஜி.ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும். இதில் சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த நடிகர், நடிகை, தயாரிப்பு என 5 பிரிவுகளில் இந்தப் படம் தேசிய விருதுகளை வென்றது.

த்ரிஷா இல்லனா நயன்தாரா

காதல், நகைச்சுவை கலந்த இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் கயல் ஆனந்தி நடித்துள்ளனர்.

மதராசப்பட்டினம்

2010-ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெளிவந்த அழகான காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்க, ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தினை கல்பாத்தி எஸ். அகோரம் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற “பூக்கள் பூக்கும் தருணம்“ பாடல் அன்று முதல் இன்று வரை அனைவரது ஃபேவரைட் பாடலாக இருக்கிறது.

மார்க் ஆண்டனி

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா, ரித்து வர்மா என பல பிரபலங்கள் நடித்திருக்கும் அறிவியல் புனைவு – அதிரடி – திரில்லர் திரைப்படம்.

இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ்.வினோத் குமார் தனது மினி ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, ஜி.வி. இசையமைத்துள்ளார்.

இன்னும் ஏராளமான படங்களிலும் நடித்தும் இசையமைத்துக் கொண்டும் இருக்கும் ஜி.வி.க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

  • நன்றி முகநூல் பதிவு
Comments (0)
Add Comment