இத்தாலி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சி, கட்டிடக் கலைஞர், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர் மற்றும் சிற்பி போன்ற பல்துறை வித்தகராக விளங்கினார். தனது சிறப்பான ஓவியங்களின் மூலம் புகழ்பெற்றவராக அறியப்பட்டார்.
குறிப்பாக, மோனாலிசா மற்றும் தி லாஸ்ட் சப்பர் போன்ற உலக புகழ்பெற்ற ஓவியங்களைப் படைத்தவர். கண்டுபிடிப்புகளில் அதிக ஆர்வம் கொண்டவர்.
மிகச்சிறந்த கற்பனை வளம் உடையவரான டாவின்சி உடற்கூற்றியல் மற்றும் வானியல் துறைகளிலும் பங்களித்துள்ளார். தனது பன்முக ஆற்றலால் பிரபஞ்ச மனிதர் என்று போற்றப்பட்டார்.
ஓவியர் லியொனார்டோ டா வின்சியின் கூற்றுக்கள்:
வாழ்க்கையின் மிக உயர்ந்த பண்பு எளிமையே.
நமது அனைத்து அறிவும் அதன் தோற்றத்தை நமது உணர்வுகளில் கொண்டிருக்கிறது.
நன்கு பயன்படுத்தப்பட்ட வாழ்க்கையே நீடித்த வாழ்க்கை.
ஒவ்வொரு செயலும் ஒரு நோக்கத்தின் மூலம் தூண்டப்பட வேண்டும்.
இயற்கை தனக்கான சொந்த சட்டங்களை ஒருபோதும் மீறுவதில்லை.
புரிதலில் உள்ள சந்தோஷமே மிகவும் உன்னதமான மகிழ்ச்சியாகும்.
கைவிடப்படுகிறதே தவிர, கலை ஒருபோதும் முடிக்கப்படுவதில்லை.
அனைத்து வகையான இயற்கைக்கும் தண்ணீரே உந்து சக்தியாக இருக்கின்றது.
நேரத்தை சரியாக பயன்படுத்தும் எவருக்கும் அது போதுமான அளவிற்கு கிடைக்கின்றது.
அறிந்திருத்தல் மட்டும் போதாது, பயன்படுத்த வேண்டும்; தயாராக இருத்தல் மட்டும் போதாது, செயல்பட வேண்டும்.
நன்றி: டான் பிரவுன் எழுதிய ‘டாவின்சி கோட்’ என்ற நூலிலிருந்து…