வாசிப்பின் ருசி:
அலங்காரத்துக்காக ஒரு மனிதனை வளர்ப்பது என்று முடிவுசெய்தால் அது எவ்வளவு அபத்தமோ, அத்தகையதுதான் செடிகளை வெறும் அலங்காரத்துக்காக மட்டுமே வளர்ப்பதும்.
பறவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. எந்தப் பறவையும் தன் தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வைத்துக் கொள்வதில்லை. அலைந்து திரிய அலுத்துக் கொள்வதும் இல்லை. பறவை, வாழ்வை ஒவ்வொரு நாளும் புதிதாகச் சந்திக்கிறது.
ஒரு காகிதம் கசக்கி எறியப்படும்போது எங்கோ ஒரு விருட்சத்தின் ஒரு கிளை முறிக்கப்பட்டுதான் அது உருவாகி இருக்கிறது என்று நமக்குத் தெரிவதில்லை.
உலகில் பயன்படுத்தப்பட்ட காகிதங்களைவிடவும் கசக்கி எறியப்பட்டு வீணடிக்கப்பட்ட காதிதங்களின் அளவு அதிகமானது.
- எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்