பொதுவுடமைச் சிந்தனையாளரின் பார்வையில் போர்!

படித்ததில் ரசித்தது:

”கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் சமாதானத்தை நேசிக்கிறோம். எனவேதான் நாங்கள் போராடுகிறோம். போர் மூள்வதற்கான சூழ்நிலைகள் அனைத்தையும் எதிர்த்து நாங்கள் போராடுகின்றோம்.

சில தனிநபர்களின் சொந்த நலன்களுக்காக நடைபெறும் பயங்கரப் போரில், கோடிக்கணக்கான மக்கள் மாண்டு மடிவதற்கும், மனித வாழ்வுக்கு அவசியமான செல்வங்களை அழிப்பதற்கும் காரணமாகும் ஒரு குற்றவாளிகூட இல்லாத உலக அமைப்புக்காக நாங்கள் போராடுகிறோம்.

ஒருவாய்ச் சோற்றுக்காக, மனிதனை எதிர்த்து மனிதன் சண்டை போடவேண்டிய நிலைமை எங்கே இருக்கிறதோ, அங்கே சமாதானம் இல்லை, இருக்கவும் முடியாது.

எனவேதான், உண்மையான சமாதானத்திற்காகப் போராடுவதற்கு கம்யூனிஸ்டுகள் என்றுமே தயங்குவதில்லை.”

– செக்கோஸ்லோவோக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி உறுப்பினரும் பத்திரிகையாளருமான ஜுலியஸ் பூசிக்.

Comments (0)
Add Comment