பிப்ரவரி 4 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்னை, தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில், இலக்கிய விமர்சகர் பேரா.க.பஞ்சாங்கம் அவர்களின் 75-வது பிறந்தநாளை ‘வையம்’ இதழின் தோழமைகள் ‘பஞ்சு 75’ என்று விழா எடுத்தனர்.
பெரிய கொண்டாட்டமாக நடத்தப்பட்ட இந்த விழாவில் பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்களின் நட்பு வட்டத்தில் உள்ள திரளான பேராசிரியர்களும், மாணவர்களும், உறவினர்களும், நண்பர்களும் பல இடங்களில் இருந்தும் வருகை தந்திருந்தனர்.
பேரா. பஞ்சுவிற்குச் சிறப்புச் செய்யும் விழா 3 பிரிவுகளாக நடைபெற்றது.
ஓவியர் மருது, எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா, கவிஞர் பேரா. பாரதிபுத்திரன், கவிஞர் ரவி சுப்ரமணியன், எழுத்தாளர் பேரா.வெங்கட சுப்புராய நாயகர், வையம் ஆசிரியர் சந்திரசேகரன்,
கவிஞர் பேரா. பச்சியப்பன், காவ்யா சண்முகசுந்தரம், எழுத்தாளர் பழ. அதியமான், எழுத்தாளர் சுப்பிரமணி இரமேஷ், புதுவை சீனு தமிழ்மணி, பேரா.குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
பலரும் அன்பின் பெருக்கால் உரையாற்றியதால் காலை 10 மணிக்கு ஆரம்பித்த விழா மதியம் 2.30 மணி வரை நீண்டது.
நிகழ்வை முனைவர் எழுத்தாளர் பா.ரவிக்குமார் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கினார்.
எழுத்தாளர் பேரா. ய.மணிகண்டன், இக்பால் ஆகியோரும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர்.
எழுத்தாளர் கன்னையன், எழுத்தாளர் அமரந்தா, எழுத்தாளர் சுடர்விழி, எழுத்தாளர் கல்பனா உள்ளிட்ட நண்பர்கள் பலரையும் நிகழ்வில் சந்தித்ததில் மகிழ்ச்சி.
நன்றி: மந்திரமூர்த்தி அழகுவின் முகநூல் பதிவு