அரங்கு நிறைந்த விழாவான ‘கவிக்கோ’ ஆவணப்பட வெளியீடு!

ஞாயிறன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸ் பிரபஞ்சன் அரங்கில் கவிக்கோ ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு கலந்துரையாடலும் நடைபெற்றது.

கவிஞர் இந்திரன், கவிஞர் – இயக்குனர் சீனு ராமசாமி, கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோருடன் படத்தின் ஒளிப்பதிவு இயக்குனர் சிஜே ராஜ்குமார், இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோருடன் ஆவணப்படத்தின் இயக்குனர் பிருந்தாசாரதியும் கலந்துகொண்டார்.

ஆவணப்படம் அனைவரையும் கவர்ந்ததுடன் அதன் நாயகரான கவிக்கோவைப் பற்றியும் அவரது கவி ஆளுமை குறித்தும் பலரிடமிருந்தும் கருத்துக்கள் ஊறிய வண்ணம் இருந்தன.

இயக்குனர் சீனு ராமசாமி ஆவணப்படத்தின் உள்ளடக்கத்தையும், அதன் திரைக்கதை அமைப்பையும், தொழில்நுட்ப நேர்த்தியையும் குறிப்பிட்டு, ‘இதைப் பள்ளிகள் தோறும் திரையிடவேண்டும்’ என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கவிஞர் இந்திரன் கவிக்கோவின் நினைவலைகளில் சிலவற்றைக் குறிப்பிட்டும், கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், கவிக்கோவின் கவித்துவப் படைப்பாளமை குறித்தும் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.

அரபு மொழிப் பேராசிரியர் ஜாகிர் உசேன், இயக்குநர் அஜயன் பாலா, பிரசாந்த் ஸ்டுடியோ சிவராமன் சில நிமிட உரை வழங்கினர்.

இலக்கிய நண்பர்கள், வாசகர்கள், திரைப்பட உலகினர், ஆய்வு மாணவர்கள் என பல துறையினரும் கலந்துரையாடலில் ஆர்வகமாகக் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

பார்வையாளர்களுக்கு காட்சிய அனுபவமாகவும் கருத்துக்கள் நிரம்பிய இலக்கிய அனுபவமாகவும் நேற்றைய நிகழ்ச்சி அமைந்தது.

கவிக்கோவின் நூல்களை தொடர்ந்து வெளியிடும் யுனிவர்சல் பப்ளிகேஷன் ஷாஜகான், கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், நண்பர் இயக்குநர் மணிபாரதி,

கவிஞர் நா.வே. அருள் பத்திரிகையாளர், பொன்சீ, கவிஞர் ம. திருவள்ளுவர் மற்றும் பார்வையாளராகக் கலந்துகொண்டவர்கள் பலரும் இலக்கிய, திரைப்பட ஆளுமைகளாக இருந்தனர்.

டிஸ்கவரி நகர்வு மற்றும் திரை மொழி டாக்கீஸ் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்து அரங்கு நிறைந்த காட்சியாக சிறப்பாக நடத்தினர்.

ஆவணப்படத் தயாரிப்பாளர் சிங்கப்பூர் முஸ்தபா, தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் இயக்குநர் பிருந்தாசாரதி நன்றி தெரிவித்தார்.

Comments (0)
Add Comment