சாரு நிவேதிதா எழுதிய Conversations with Aurangzeb என்ற நாவல் க்ராஸ்வேர்ட் புக் விருது (crossword book award) பெற்றுள்ளது.
தமிழ் இலக்கியம் படிக்கும் வாசகர்களிடையே மிகப்பெரிய இடத்தைப் பிடித்த சாரு, அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை வலியுறுத்துபவர்.
இறுக்கம் மிகுந்த நவீன வாழ்வில் சக மனிதன் மீதும், பிராணிகள் மீதும், இயற்கை மீதும் அன்பை போதிப்பவை சாரு நிவேதிதாவின் எழுத்து என்று குறிப்பிடுகிறது இவரைப் பற்றிய குறிப்பில் விக்கிபீடியா.
வெளிவந்த காலகட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட இவரது நாவல் ஸீரோ டிகிரி, சுவிட்சர்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு 2013 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது.
எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ், 2001 – 2010 ஆண்டுகளில் இந்தியாவின் முதன்மை பத்து மனிதர்களில் ஒருவராக சாருவைத் தேர்ந்தெடுத்தது.
புதிய எக்ஸைல், ஸீரோ டிகிரி, ராஸ லீலா உள்ளிட்ட நாவல்களும், கோணல் பக்கங்கள், தப்புத் தாளங்கள், மனம்கொத்திப் பறவை, வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் சாருவின் படைப்புகளில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
க்ராஸ்வேர்ட் புக் விருது பெற்றுள்ள சாருநிவேதிதாவுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட தமிழ்ப் படைப்பாளிகள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.