இளம் படைப்பாளிகளை கைகுலுக்கி வரவேற்கும் பவா!

எழுத்தாளர் நரன்

தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொள்ளும் படைப்பாளிகளின் மத்தியில் பவா முற்றிலும் வேறுபட்டவர். நல்ல இலக்கிய பிரதிகளை, நல்ல படைப்புகளை, அதன் படைப்பாளிகளை தான் போகுமிடமெல்லாம், காணும் மனிதரிடமெல்லாம் சிலாகித்துச் சொல்பவர்.

அவர் ஒரு போதும் தன்னுடைய படைப்புகளை எந்த இடத்திலும் முன்னிறுத்தியதில்லை. இன்றைய காலகட்டத்தில் நல்ல கதைகளோடு எந்த இளம் படைப்பாளி வந்தாலும் கைக்குலுக்கி வரவேற்பவர். தொடர்ந்து அவர்களை எழுத உற்சாகப்படுத்துபவர்.

எனது படைப்புகளும், சிறுகதைகளும் இவ்வளவு பெரிய வாசகப் பரப்பை அடைந்ததற்கு பவா தான் மிக முக்கிய காரணம். அவர் எனது பல கதைகளை பல்வேறு மேடைகளில் பேசியிருக்கிறார்.

அதைக் கேட்கும் புதிய வாசகர்கள் அடுத்த நாளே எனது அந்த புத்தகத்தை வாங்கி வாசித்து என்னை தொடர்பு கொண்டு இரண்டு வார்த்தைகளையாவது பகிர்ந்துக் கொள்கிறார்கள்.

மேடையில் பவா எனது வாரணாசி கதையை அவ்வளவு அழகாகச் சொன்னார். இந்த விருதும், மகிழ்வான நாளும், தருணங்களும், கிடைத்த புதிய மனிதர்களும் பவாவால் கிடைத்தது. இன்னும் உற்சாகமாக எழுத பவா எனக்கு மீண்டும் ஒரு வழியை ஏற்படுத்தி தந்திருக்கிறார்.

-எழுத்தாளர் நரன்

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment