நட்புக்கு மரியாதை தந்த ஐரிஷ் எழுத்தாளர் எவ்லின் கோன்லான்!

அன்பின் இந்திரன், நலந்தானே? எனது நண்பர் ஒருவர் அவரது தோழியான உலகப்புகழ் பெற்ற ஆடையலங்கார நிபுணரை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

அவரிடம் நீங்கள் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்த பட்டு சால்வையைக் காட்டினேன். அதன் வேலைப்பாட்டைப் பாராட்டிய அவர், அதனைக் கொண்டு நான் முக்கியமான கூட்டங்களுக்குப் போகும்போது அணியக்கூடிய அழகிய ஜாக்கெட் ஒன்றை அந்த பட்டு சால்வையில் தைத்துக் கொடுப்பதாகச் சொன்னார்.

அதை அணிந்து இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றால் மிக கௌரவமாக இருக்கும் என்றார். நான் முடியாது என்று மறுத்து விட்டேன்.

நட்பின் அடையாளமாக அளித்த பட்டு சால்வையை வெட்டுவதா? கூடவே கூடாது என்று மறுத்து விட்டேன்.

கணவரும் இசைக்கலைஞருமான ஃபிண்டன் வேலியும் (FINTAN VALLEY) என்னை வெகுவாக ஆதரித்தார். ஃபிண்டன் தனது வாழ்த்துகளை உங்களுக்குத் தெரிவித்தார்.

இப்படிக்கு
எவ்லின்

********

எவ்லின் அனுப்பிய இந்த மின்னஞ்சல் நட்புக்கு அவர்கள் கொடுக்கும் உயரத்தை எனக்குக் காட்டியது. நான் கொடுத்த சால்வையை அவர் வெட்டி ஆடையாக தைத்தால், இந்தியாவில் இருக்கும் எனக்கு எதுவும் தெரியப்போவதில்லை.

ஆனாலும் நட்பின் பொருட்டு அளித்த சால்வையை வெட்டக் கூடாது என்கிற அவரது மனநிலைதான் ஓர் உயரிய கலைஞர்களுக்கான மனநிலை.

– இந்திரன்

Comments (0)
Add Comment