இலைகள் அசையும் ஓசையும் பச்சை வாசனையும்!

கவிஞர் வேல்கண்ணன்!

எனக்குப் பிடித்த ஜேர்மன் நாளிதழ் கொண்டு உறை போடப்பட்ட ‘Strictly Personal’ என்று முகப்பிலேயே என் கைப்பட எழுதிய நாட்குறிப்பு.

இன்று, 23 வருடங்கள் கழித்து, அதனைத் தொட்டுக் கையில் எடுக்கும் இந்த நொடி, எனது விரல்கள் விரல்களாகவே இல்லை. மேலெங்கும் சிறகுகள். விழி தொடும் நிலமெல்லாம் விரிந்த வானம். மழையென்றால் ஒதுங்க, இலைகள் போர்த்திக் கிளைகள் நிறைந்த மரங்கள். விதைகள் பொதிந்த காடு.

நீர் தளும்பும் குளங்கள். பறப்பதன்றி வேறேதும் அறியாப் பொழுதுகள். புரட்டுகிறேன். இலைச் சருகுகளும், தனியிறகுகளும் செருகப்பட்ட பக்கங்கள். வாரத்தின் இரண்டு நாட்கள் மட்டும் எப்போதும் எழுதி நிறைந்து, எழுதப் போதாமல் போயின.

இன்னும் நன்றாக நினைவிருக்கின்றது அந்த நாள், அதன் கால நிலை, என் மனதின் நிலை. எல்லாமே நேற்றின் நொடி போல.
~
இலைகள் அசையும் ஓசையும் பச்சை வாசனையும் நம்முள் உணர்வதாகத் தொடங்கும் இந்த கட்டுரை தி கிரேட் Jorge Luis Borges பற்றியும் அவரின் எழுத்து குறித்தும் அவரின் கவிதை, அவரின் ஒரு சிறு நேர்காணல் என்று விரிகிறது.

இடையிடையே பிரசாந்தி சேகரத்தை எந்த அளவுக்கு, ஆழத்திற்கு Borgesன் எழுத்து தாக்கம் செய்து இருப்பதையும் உணர்த்துகிறார்.

மேலதிகமாக உணர்ச்சி வசப்படுகிறாரோ என்றளவில் மொழி குறித்து இவர் இப்படிச் சொல்லுகிறார்:

“மொழிகளில் எனக்குப் பாகுபாடு கிடையாது. ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு வாழ்வுக்குள் எமைக் கொண்டுசென்று வாழ்ந்திட வைக்கின்றன. ஆனால், ஸ்பானிஷ் மொழி ஒரு விதிவிலக்கு. எனக்கது என் மனதின் வீடு”

இந்த கட்டுரையின் லிங்க் முதல் கமெண்டில் கொடுத்து உள்ளேன். வாசித்து பாருங்கள், உங்களுக்கும் புரியும். வெகு விரைவில், மொழி பெயர்ப்பு நூல் சால்ட் பதிப்பகம் வெளியிட இருக்கிறது.

சமீபத்தில் மொழிபெயர்த்த Miguel Hernandezயின் கவிதை ஒன்று (காரணமாக கவிஞர் க.மோகனரங்கன் இருந்திருக்கிறார்)

உலர்ந்த ஆற்றுப்படுகையைக் கடந்து வீசி,
ஜன்னல்களை அச்சுறுத்தும்
கசப்பான காற்றுக்கு என்ன வேண்டும்,
நான் உன்னை என் கைகளில் அள்ளிக்கொள்ளும் பொழுது?
அதற்கு எமை வீழ்த்தவேண்டும். அடித்துச்செல்லவேண்டும்.
வீழ்ந்தோம். அடித்துச்செல்லப்பட்டோம்.
குருதிகள் இரண்டும் விலகின.
தன் கசப்பை மேலும் கசப்பாக்கும் காற்றுக்கு இனியும் என்ன தான் வேண்டும்?
நாம் பிரிவது.
– Miguel Hernandez
—-
என்னுடைய பேரிழப்பு ஒன்றில் ஆறுதல் சொல்லத் தொடங்கி, நெருங்கிய தோழமையில் ஒன்றாக மாறியவர். நிகழ்வு, இழப்பு, மகிழ்ச்சி, கனவு, வாசிப்பு, பாதிப்பு, தாக்கம், பார்வை என்று நீள்கிறது எங்களின் உரையாடல்..

இனிய தோழமைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க! வளர்க!!
“டீ இன்னும் பாக்கி இருக்கு மச்சி”

நன்றி: கவிஞர் பிருந்தா சேது, கவிஞர் மோகனரங்கன், கவிஞர் நரன், சால்ட் பதிப்பகம், அகழ் இணைய இதழ்.

#கவிஞர் பிருந்தா சேது #கவிஞர் மோகனரங்கன் #கவிஞர் நரன் #Miguel Hernandez #Jorge Luis Borges #kavignar_brintha_sethu #kavignar_mohanarangan #kavignar_naren 

Comments (0)
Add Comment