மனம்போன போக்கில் பேசி மாட்டிக்கொண்ட கஸ்தூரி!

செய்தி:

தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சு: நடிகை கஸ்தூரி தலைமறைவு! – கைது செய்ய காவல்துறையினர் தீவிரம்.

கோவிந்த் கமெண்ட்:

ஆவேசமாக மைக்கிற்கு முன் பேசும் பலருக்கு ஏற்படும் அதே கதிதான் கஸ்தூரிக்கும் ஏற்பட்டிருக்கிறது.

தன் இஷ்டத்திற்கு யாரையும் மனம் போன போக்கில் பேசிவிடுவது, பிறகு அதற்கு தாமதமாக மன்னிப்புக் கூறுவது என்கின்ற வழக்கமான முறைக்கு மாறாக கஸ்தூரி மேல் வழக்குக்கு மேல் வழக்குகள் பாய ஆரம்பித்துவிட்டன.

இவ்வளவுக்குப் பிறகு பேசியபோது காட்டி அதே ஆவேசத்தோடு, வீட்டில் இருக்க முடியுமா? அதனால் வேறு வழி இல்லாமல் எஸ்கேப் ஆகி இருக்கிறார். போலீசாரும் பொறுப்பாக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

Comments (0)
Add Comment